»   »  நுவ்வு சலா ... திரிஷா!

நுவ்வு சலா ... திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சியின் இயக்கத்தில், தெலுங்குப் படம் ஒன்றில் முழுக்க முழுக்க பாவாடை, தாவணியில் கலக்கப்போகிறார் திரிஷா.

கிருஷ்ணவம்சியின் இயக்கத்தில் உருவாகும் படம் நுவ்வு சலா ஹாட் குரு. ரவி தேஜாதான் இதில் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் திரிஷா.

இந்தப் படத்தில் பக்கா கிராமத்துப் பொண்ணாக நடிக்கவிருக்கிறார் திரிஷா. இந்த வேடம் குறித்து படு சந்தோஷமாக இருக்கிறார் மாடர்ன் கேர்ள்திரிஷா.

இதுவரை நான் ஒரு படத்திலும் முழுக்க முழுக்க கிராமத்துப் பெண்ணாக நடித்ததில்லை. அந்தக் குறையைத் தீர்க்க வந்தது போல இந்தப் பட வாய்ப்புகிடைத்தது. உடனே ஒத்துக் கொண்டேன்.

இப்படத்தில் மண் மணம் மணக்க அசல் கிராமத்துப் பெண்ணாக நடிக்க உள்ளேன். அப்பாவித்தனமான கிராமத்துப் பெண் கேரக்டர். எந்தக்கவலையும் இல்லாமல், ஆடிப் பாடி ஜாலியாக இருக்கிற கேரக்டர். இதில் நடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் திரிஷா.

எல்லாஞ் சரி, டான் படத்திலிருந்து விலக ஜாஸ்தியாக சம்பளம் கேட்டதும் ஒரு காரணமாமே.?

நோ, நோ. கால்ஷீட் கொடுக்க முடியாததால்தான் நடிக்க முடியவில்லை. அவர்கள் கேட்ட பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பீமா, கிரீடம் படங்களில்நடிக்க வேண்டியிருந்தது. இதனால்தான் டான் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

தமிழில் அசினும், தெலுங்கில் இலியானாவும் உங்களுக்கு செம போட்டியாக இருக்கிறார்களே?

யார் சொன்னது? எனக்கு எதிரி என்று யாரும் கிடையாது. நல்ல ஆரோக்கியமான போட்டி என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி நான்யாரையும் எதிரியாக நினைப்பதில்லை (ஆனால் அவர்கள் நினைக்கலாம் அல்லவா?)

அதென்ன அம்மா கொடுக்காக இருக்கிறீர்கள்?

(பலமாக சிரித்தபடி) ஏன் இருக்கக் கூடாதா.? எனது அம்மா அனுபவசாலி, அவர் எடுக்கும் முடிவுகள் சென்ட் பர்சன்ட் சரியாக இருக்கும்.அதனால்தான் நடிப்பை மட்டும் பார்த்துக் கொண்டு மற்ற விஷயங்களை அம்மாவிடம் விட்டு விடுகிறேன். தட்ஸ் ஆல் என்று ஸ்டைலாக ஸ்மைல்செய்து பை பை சொன்னார் திரிஷா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil