»   »  எங்கே என் ஆளு? திரிஷாவின் தேடல்!

எங்கே என் ஆளு? திரிஷாவின் தேடல்!

Subscribe to Oneindia Tamil

எனது சுதந்திரத்தில் தலையிடாத, நான் விரும்பும் சுதந்திரத்தைக் கொடுப்பவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்கிறார் திரிஷா.

தமிழ், தெலுங்கு என இரட்டைக் குதிரை சவாரியை படு சிறப்பாகவே செய்து வரும் திரிஷா, பீமாவில், மீண்டும்ஒரு கிளாமர் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளாராம்.

சாமி படத்தில் விக்ரமுடன் இணைந்து திரிஷா செய்த சேஷ்டைகளை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அதேசாமியாட்டம், பீமாவிலும் சீரும், சிறப்பமுமாக இருக்கிறதாம்.

பீமாவில், திரிஷாவின் கிளாமர் பிளிறல் மற்ற நாயகிகளுக்கு பெரும் பீதியை கொடுத்துள்ளதாம். அடுத்துவிஷாலுடன் இணைந்து விளையாடப் போகும் திரிஷா, அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி மாய்ந்துமாய்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.

கொஞ்சம் ஓய்வாக உட்கார்ந்திருந்த திரிஷாவை நெருங்கி எல்லாம் ஓ.கே., எப்போ கல்யாணம் என்று காதைக்கடித்தோம். தனக்கே உரிய நக்கல் சிரிப்பை சிந்திய திரிஷா, கல்யாணம்னா என்ன பாஸ் என்று நம்மிடமேகேள்வியைத் திருப்பிப் போட்டார்.

நாம் முழிப்பதைப் பார்த்து அவரே தொடர்ந்தார். நான் ஒரு சுதந்திரப் பறவை. என்னை யாரும் தடுக்க முடியாது,தடுக்கவும் கூடாது. எனக்குப் பிடித்தால்தான் எதையும் செய்வேன். இதற்கெல்லாம் கணவன் என்ற ரூபத்தில்தடை வருவதை நான் விரும்பவில்லை.

எனக்கு கணவராக வரப் போகிறவர், முதலில் சுய சம்பாத்தியம் உள்ளவராக இருக்க வேண்டும். எனதுசுதந்திரத்தில் தலையிடக் கூடாது, அவருடைய சுதந்திரத்தில் நான் குறுக்கிட மாட்டேன்.

என்னைக் கட்டுப்படுத்தக் கூடாது, நாம் ஆண் என்ற அகந்தையோடு பழகக் கூடாது, அணுகக் கூடாது.மொத்தத்தில் நான் நானாக இருக்க வேண்டும். கல்யாணத்திற்குப் பிறகும். அப்படி ஒரு ஆம்பளை கிடைத்தால்அடுத்த நிமிடமே கல்யாணத்திற்கு நான் ரெடி என்கிறார் தி>ஷா.

அப்படி ஒரு ஆளு காதலித்தால்தானே கிடைப்பார். ஸோ, காதலை ஆரம்பித்து விட்டீர்களா என்று அடுத்தகேள்விக்குத் தாவினோம்.

காதல் எல்லாம் சட்டுப் புட்டென்று வந்து விடாது பாஸ். பார்த்தவுடன் வருவதல்ல காதல், பரஸ்பர புரிதல்இருக்க வேண்டும். நான் யார், நீ யார், உன் பிளஸ் என்ன, என் பிளஸ் என்ன, என் மைனஸ் என்ன, உன் மைனஸ்என்ன, ஒத்துப் போகுமா என்பதையெல்லாம் பார்த்துத்தான் காதலிக்க முடியும்.

எனக்கு அந்தப் பொறுமை கிடையாது. மேலும் என்னைக் கவர்ந்த ஆணையும் இதுவரை சந்திக்கவில்லை.சந்தித்தால், காதலைப் பற்றி சிந்திக்கலாம் என்று மறுபடியும் தீயாகப் பேசுகிறார் திரிஷா.

ஒரு படத்தில் வடிவேலு பெண் வேடம் போட்டிருப்பார். அவருக்கும், கோவை சரளாவுக்கும் சண்டை வரும்.அப்போது வடிவேலு ஒரு டயலாக் அடிப்பார். பார்க்கத்தாண்டி நான் பொம்பளை, நெசத்துல ஆம்பளைஎன்பார். இந்த டயலாக்தான் திரிஷாவின் பேச்சைக் கேட்ட பிறகு ஞாபகத்திற்கு வருகிறது!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil