»   »  வில்லியாக விரும்பும் திரிஷா!

வில்லியாக விரும்பும் திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

படு பயங்கரமான வில்லி வேடத்தில் நடிக்க பேராவலாக இருக்கிறேன் என்று கூறி பயமுறுத்துகிறார் திரிஷா.

இரட்டை சவாரியில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் திரிஷாவுக்கு நம்பர் ஒன் ஸ்லாட்டில் தொடர்ந்து கோலோச்ச வேண்டும், முன்னணிஹீரோக்களுடன் ஜோடி போட்டு அசத்த வேண்டும் என்ற ஆசையோடு சமீப காலமாக புதுசு புதுசாக சில ஆசைகளும் பிறந்துள்ளதாம்.

அதில் முக்கியமானது, பயங்கரமான வில்லியாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது. பயங்கரமான நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கஆசையாக இருக்கிறேன்.

எனக்கு கஜோலின் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். குப்த் படத்தில் அவர் நடித்த வேடம் எனக்கு இன்னும் மனசில் நிற்கிறது. அப்படி ஒரு வேடம்கிடைத்தால் பின்னி விட ரெடியாக இருக்கிறேன்.

அதேபோல, படையப்பா படத்தில் நீலாம்பரி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்ததும் அசத்தலான வேடம்தான். அதுபோன்ற கேரக்டரிலும் நடிக்கஆசை.

இப்படிப்பட்ட ரோல்களில் நடித்தால் ரசிகர்களை ஈசியாக ரீச் ஆக முடியும். எனவே நெகட்டிவான ரோல்கள், நல்ல வெயிட்டான ரோல்கள்கிடைத்தால் தூள் கிளப்பி விடுவேன் என்று தனது சின்னச் சின்ன ஆசைகளை வெளிப்படுத்தினார் திரிஷா.

சரி எப்ப கல்யாணம்.?

அய்யோ, எல்லோருமே இதையே கேட்கிறாங்க, ஏன்னே தெரியலை! கல்யாணத்தைப் பத்தி நான் நினைச்சுக் கூட பார்க்கவில்லை. எனக்கென்று சிலஇலக்குகள், கொள்கைகள் இருக்கிறது. அதை முடித்து விட்டுத்தான் கல்யாணம், காட்சி எல்லாம்! என்று முடித்து கைகூப்பி (காலால் உதைக்காதகுறை!) விடை கொடுத்தார் திரிஷா.

திரிஷாவுக்குன்னு புதுசாவா பொறக்காப் போறாரு மாப்பிள்ளை, எங்கே இருக்காரோ!

Read more about: trisha wants to become villi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil