»   »  என்னை சமாளிப்பது கஷ்டம்: திரிஷா

என்னை சமாளிப்பது கஷ்டம்: திரிஷா

Subscribe to Oneindia Tamil

என்னைக் கல்யாணம் செய்து கொண்டு, என்னை சமாளித்து குடும்பம் நடத்துவது ஈசியான வேலை அல்ல, ரொம்ப ரொம்ப கஷ்டம் என்கிறார்திரிஷா.

தமிழுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் கிடைத்த அழகிய அடாவடி திரிஷா. எத்தனை பேரழகிகள் வந்தாலும் திரிஷாவின் மார்க்கெட் மட்டும்ஸ்திரமாக போய்க் கொண்டிருக்கிறது.

அழகு நடிப்பு, அட்டகாச டான்ஸ் என அசத்தி வரும் திரிஷாதான் இப்போதைக்கு தமிழிலும், தெலுங்கிலும் அதிகம் விரும்பப்படும் நாயகியாகஉள்ளார்.

தமிழில் ஆசின், தெலுங்கில் இலியானா என இரட்டைத் தலைவலி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது வழியில் தளராமல்நடைபோட்டு வரும் திரிஷா இப்போதெல்லாம் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார்.

முன்பெல்லாம் பத்திரிக்கைக்காரர்களைக் கண்டால் ஓடி விடுவார் அல்லது அவர்களுக்குப் புரியாத ஆங்கிலத்தில் பேசி கலாய்ப்பார். ஆனால்இப்போது அப்படி இல்லை. கூப்பிட்டு உட்கார வைத்து நாலு வார்த்தை நல்லதாக பேசி அனுப்புகிறார்.

முன்பை விட தமிழுக்கு இப்போது அதிக முக்கியத்துவம் தருகிறார். இந்த வருடம் அவர் புதிதாக தெலுங்குப் படம் எதையும் ஒத்துக்கொள்ளவில்லையாம். தமிழில் விஷாலுடன் சத்யம், அஜீத்துடன் கிரீடம், விக்ரமுடன் பீமா என மூன்று படங்களில் நடிக்கிறார். தெலுங்கில்செல்வராகவன் இயக்கத்தில் அடவரி மடலுகு அர்த்தலே வெருலே என்ற படத்தில் மட்டும் நடிக்கிறார்.

இப்போதெல்லாம் திரிஷாவை சந்திக்கும் செய்தியாளர்கள் எப்ப மேடம் கல்யாணம் என்ற கேள்வியைத்தான் அதிகம் கேட்கிறார்களாம். இதற்குப்பதில் சொல்லி சொல்லி சலித்துப் போய் விட்டாராம் திரிஷா.

சரி நம்ம பங்குக்கு கேட்டு வைப்போம் என எப்பதான் கல்யாணம் என்றோம். அழகான வெடிச் சிரிப்பை சிந்திய திரிஷா, என்னைக் கல்யாணம்செய்து கொண்டு குடும்பம் நடத்துவது அவ்வளவு ஈசியான வேலை கிடையாது சார்.

எனக்குக் கணவராக வருகிறவருக்கு என்னைச் சமாளிப்பது ஈசியான வேலையாகவோ அல்லது இனிமையானதாகவோ இருக்காது என்கிறார்குறும்பாக.

சரி, சிம்புவுடன் நடிக்கப் போகிறீர்களாமே என்று அடுத்த கேள்விக்குப் போனோம். அதில் என்ன அவ்வளவு பெரிய தப்பு? சிம்புவுடன் நடிக்கக்கூடாதா? சிம்புவை எனக்குச் சின்னப் புள்ளையிலிருந்தே தெரியும். இருவரும் சேர்ந்து படித்தோம். ஏற்கனவே ஒரு படத்தில் இணைந்துநடித்துள்ளோம் என்று நம்மையே மடக்கினார்.

மாமி ரொம்பத்தான் வெவரம், பீமா மாதிரி ஒரு மாமா மாட்டாமலா போய் விடுவார்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil