மொட்டை ரஜினி- த்ரிஷா பரவசம்

By Staff

சத்யம் தியேட்டரில் சிவாஜி படத்தைப் பார்த்த திரிஷா, மொட்டைத் தலையுடன் தோன்றிய ரஜினியைப் பார்த்து அசந்து, ஸ்க்ரீனை நோக்கி பூக்களைத் தூவி பரவசப்பட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி, ரசிகர்களையும், பொதுமக்களையும் மட்டுமல்லாமல், திரையுலகினரையும் கூட பெரும் ஈர்ப்புக்குள்ளாக்கி விட்டது.

நேற்று நடிகர், நடிகையர் பலர் சத்யம் தியேட்டரில் சிவாஜி பார்க்க குழுமினர். அவர்களில் திரிஷாவும் ஒருவர். படத்தைப் பார்த்து விட்டு திரும்பிய திரிஷா தனது சிவாஜி அனுபவம் குறித்துக் கூறுகையில், இது ஒரு திரில்லான அனுபவம். சூப்பர் ஸ்டாரின் புதிய ஸ்டைல்களைப் பார்த்து பரவசப்பட்டேன்.

ரஜினி சாரின் நடிப்பும், ஸ்டைல்களும் என்னைக் கவர்ந்து விட்டன. நான் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை.

மொட்டைத் தலையுடன் ரஜினி சார் தோன்றியதைப் பார்த்தபோது உற்சாகத்தில் குரல் எழுப்பி கத்தி விட்டேன். பிறகு, பூக்களை ஸ்க்ரீனை நோக்கி தூவி சந்தோஷப்பட்டேன்.

மொட்டைத் தலை ரஜினி எனது இதயத்தைக் கவர்ந்து விட்டார். சிவாஜியில் ரஜினியை முதல் சீனிலிருந்து கடைசி வரை நான் முழுமையாக ரசித்தேன். ரஜினி சார் ரியல்லி சோ ஹாட். நான் அவரது பரம ரசிகை, திரும்பத் திரும்ப இங்கு வந்து சிவாஜியைப் பார்ப்பேன்.

சந்திரமுகியை விட சிவாஜி பெட்டராக உள்ளது. ரஜினி படங்களிலேயே இது புதிய சாதனையை நிகழ்த்தும் என்றார் திரிஷா.

ரஜினியின் அடுத்த படத்தில் திரிஷாதான் நாயகி என்று ஒரு பேச்சு உலவுகிறது. அது இன்னும் உறுதியாகாத நிலையில் ரஜினியை புகழோ புகழென்று திரிஷா புகழ்ந்து தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X