twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது நான்சென்ஸ்: திரிஷா டென்ஷன் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, தியேட்டர்களில் கொடி கட்டுவது எல்லாம்சுத்த நான்சென்ஸ். எனது ரசிகர்கள் என்ற பெயரில் நடந்து வரும் இந்தக் கூத்துக்கள்குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. இதை நான் என்கரேஜ் பண்ண மாட்டேன் என்றுதிரிஷா கூறியுள்ளார். தென்னிந்திய கனவுக் கன்னி திரிஷா ரசிகை மன்ற பெயரில், சில மாதங்களுக்கு முன்புசென்னையில் ரசிகைகள் மன்றம் தொடங்கினர். முதல் நாளிலேயே திரிஷா படத்திற்குபாலாபிஷேகம் நடத்தி அசத்தினர்.தொடர்ந்து மன்றத்திற்கென தனியாக கொடியும் உருவாக்கியுள்ளனர்.அத்தோடு நிற்காமல், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் பட ரிலீசின்போது அதில்நடித்த ஹீரோ ஜெயம் ரவியின் ரசிகர்களுடன் அடிதடியிலும் இறங்கினர் அதில் நடித்ததிரிஷாவின் ரசிகைகள்.திரிஷா ரசிகைகள் போகும் வேகம் மற்ற நடிகர்களின் ரசிகர்களிடையே பெரும்எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவியுடன் மோதுவது மாதிரி நம்ரசிகர்களுடனும் மோதினால் நம் இமேஜ் காலியாகுமே என்ற பயம் இளம்நடிகர்களுக்குள் பரவியுள்ளது.இதனால் தன்னை நடிகர்கள் ஓரங்கட்டக் கூடும் என்ற பயம் திரிஷாவுக்கும்வந்துவிட்டதாகத் தெரிகிறது.இந் நிலையில் ரசிகர் மன்றம் என்ற பெயரில நடந்து வரும் கூத்துக்களுக்கும்,எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திடீரென திரிஷா அறிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பாலாபிஷேகம் செய்வது, கொடி கட்டுவது எல்லாம் சுத்தநான்சென்ஸ். இதை நான் என்கரேஜ் செய்யவே மாட்டேன். எனது அனுமதியைக்கேட்டு ரசிகர் மன்றத்தை தொடங்கவில்லை.பத்திரிக்கையில் பார்த்துத்தான் எனது பெயரில் மன்றம் தொடங்கியருப்பதே எனக்குத்தெரிய வந்தது. அப்போது நான் ஹைதராபாத்தில் இருந்தேன். உடனடியாக எனதுஅம்மா உமாவுக்கு போன் செய்து கேட்டபோது,ரசிகை மன்றம் தொடங்கப் போவதாக கூறி ஒரு பெண் (ஜெஸ்ஸி) தன்னைஅணுகியதாகவும், அவர் சமூக சேவைகள் செய்து வருவதாகவும், அவர் தான் இந்தமன்றத்தை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.அந்தப் பெண்ணிடம், எனது அம்மா, நீங்கள் திரிஷாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்என்று கேட்டபோது, ஒன்றும் வேண்டாம். நாங்கள் நற்பணிகள் செய்யும்போது அதைதிரிஷா நேரில் வந்து தொடங்கி வைத்தால் பாதும் என்று அந்தப் பெண் கூறியதாகஎனது தாயார் தெரிவித்தார்.இதனால் நானும் விட்டு விட்டேன். அதற்காக பாலாபிஷேகம் செய்வது, கொடிகட்டுவது எல்லாம் சுத்த முட்டாள்தனம். அந்தப் பாலை ஏழைக் குழந்தைகளுக்குக்கொடுக்கலாம்.ரசிகைகள் என்ற பெயரில் நடக்கும் இந்த வேலைகளை நான் ஆதரிகக மாட்டேன்.எனக்கும் சமூக சேவையில் ஆர்வம் உள்ளது. சினிமா நடிகையாக சில காலம்மட்டுமே நீடிக்கமுடியும் எனபது எனக்கும் தெரியும். அதன் பின்னர் நான் சமூகசேவையில் இறங்குவேன் (இதை நம்புபவர்கள் நம்பலாம்..) என்று கூறியுள்ளார்திரிஷா.பிரச்சினைகள் எல்லாம் திரிஷாவையே சுத்திக்கிட்டு திரியுதுகளேய்யா...

    By Staff
    |

    கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, தியேட்டர்களில் கொடி கட்டுவது எல்லாம்சுத்த நான்சென்ஸ். எனது ரசிகர்கள் என்ற பெயரில் நடந்து வரும் இந்தக் கூத்துக்கள்குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. இதை நான் என்கரேஜ் பண்ண மாட்டேன் என்றுதிரிஷா கூறியுள்ளார்.

    தென்னிந்திய கனவுக் கன்னி திரிஷா ரசிகை மன்ற பெயரில், சில மாதங்களுக்கு முன்புசென்னையில் ரசிகைகள் மன்றம் தொடங்கினர். முதல் நாளிலேயே திரிஷா படத்திற்குபாலாபிஷேகம் நடத்தி அசத்தினர்.

    தொடர்ந்து மன்றத்திற்கென தனியாக கொடியும் உருவாக்கியுள்ளனர்.

    அத்தோடு நிற்காமல், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் பட ரிலீசின்போது அதில்நடித்த ஹீரோ ஜெயம் ரவியின் ரசிகர்களுடன் அடிதடியிலும் இறங்கினர் அதில் நடித்ததிரிஷாவின் ரசிகைகள்.

    திரிஷா ரசிகைகள் போகும் வேகம் மற்ற நடிகர்களின் ரசிகர்களிடையே பெரும்எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவியுடன் மோதுவது மாதிரி நம்ரசிகர்களுடனும் மோதினால் நம் இமேஜ் காலியாகுமே என்ற பயம் இளம்நடிகர்களுக்குள் பரவியுள்ளது.

    இதனால் தன்னை நடிகர்கள் ஓரங்கட்டக் கூடும் என்ற பயம் திரிஷாவுக்கும்வந்துவிட்டதாகத் தெரிகிறது.

    இந் நிலையில் ரசிகர் மன்றம் என்ற பெயரில நடந்து வரும் கூத்துக்களுக்கும்,எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திடீரென திரிஷா அறிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், பாலாபிஷேகம் செய்வது, கொடி கட்டுவது எல்லாம் சுத்தநான்சென்ஸ். இதை நான் என்கரேஜ் செய்யவே மாட்டேன். எனது அனுமதியைக்கேட்டு ரசிகர் மன்றத்தை தொடங்கவில்லை.

    பத்திரிக்கையில் பார்த்துத்தான் எனது பெயரில் மன்றம் தொடங்கியருப்பதே எனக்குத்தெரிய வந்தது. அப்போது நான் ஹைதராபாத்தில் இருந்தேன். உடனடியாக எனதுஅம்மா உமாவுக்கு போன் செய்து கேட்டபோது,

    ரசிகை மன்றம் தொடங்கப் போவதாக கூறி ஒரு பெண் (ஜெஸ்ஸி) தன்னைஅணுகியதாகவும், அவர் சமூக சேவைகள் செய்து வருவதாகவும், அவர் தான் இந்தமன்றத்தை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

    அந்தப் பெண்ணிடம், எனது அம்மா, நீங்கள் திரிஷாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்என்று கேட்டபோது, ஒன்றும் வேண்டாம். நாங்கள் நற்பணிகள் செய்யும்போது அதைதிரிஷா நேரில் வந்து தொடங்கி வைத்தால் பாதும் என்று அந்தப் பெண் கூறியதாகஎனது தாயார் தெரிவித்தார்.

    இதனால் நானும் விட்டு விட்டேன். அதற்காக பாலாபிஷேகம் செய்வது, கொடிகட்டுவது எல்லாம் சுத்த முட்டாள்தனம். அந்தப் பாலை ஏழைக் குழந்தைகளுக்குக்கொடுக்கலாம்.

    ரசிகைகள் என்ற பெயரில் நடக்கும் இந்த வேலைகளை நான் ஆதரிகக மாட்டேன்.

    எனக்கும் சமூக சேவையில் ஆர்வம் உள்ளது. சினிமா நடிகையாக சில காலம்மட்டுமே நீடிக்கமுடியும் எனபது எனக்கும் தெரியும். அதன் பின்னர் நான் சமூகசேவையில் இறங்குவேன் (இதை நம்புபவர்கள் நம்பலாம்..) என்று கூறியுள்ளார்திரிஷா.

    பிரச்சினைகள் எல்லாம் திரிஷாவையே சுத்திக்கிட்டு திரியுதுகளேய்யா...

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X