தத்தெடுத்த திரிஷா ரசிகைகள் தென்னிந்திய கனவு தேவதை திரிஷா ரசிகைகள் சங்கம் 11 அனாதைக் குழந்தைகளைதத்தெடுத்துள்ளனர்.நடிகர்களுக்கு இருப்பது போல நடிகைகளுக்கு தமிழகத்தில் ரசிகர் மன்றம் இல்லை.அதிலும் ரசிகை மன்றம் எல்லாம் இல்லே இல்லாமல் இருந்தது.முன்பு குஷ்புவுக்கு தான் ரசிகர் மன்றம் இருந்தது. கோவில் கூட கட்டி பயபக்தியுடன்கும்பிட்டனர். பிறகு சிம்ரனுக்கு ரசிகர் கூட்டம் இருந்தது. ஆனாலும் கோவில்அளவுக்கு அவர்கள் உணர்ச்சிவசப்படவில்லை.இப்போது திரிஷாவுக்கு முதல் முறையாக சென்னையில் ரசிகை மன்றம்தொடங்கப்பட்டுள்ளது. வடபழனியில் திறக்கப்பட்ட இந்த மன்றத்தின் சார்பில்திரிஷாவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் எல்லாம் செய்து அசத்தினார்கள்ரசிகைகள்.ரசிகை மன்றத்தை வரவேற்ற திரிஷா,நநில்ல விஷயத்திற்காக மன்றம் பாடுபடவேண்டும். அப்படிச் செய்தால் நானும் அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களதுசேவையில் பங்கேற்பேன் என்றார்.இந் நிலையில், 11 அனாதைக் குழந்தைகளை திரிஷா ரசிகை மன்றத்தினர்தத்தெடுத்துள்ளனர். அதில் ஒரு குழந்தை மன வளர்ச்சி குன்றிய குழந்தையாம்.இதுகுறித்து மன்றத் தலைவி ஜெசி கூறுகையில், இந்தக் குழந்தைகளை நாங்கள் முழுமனதோடு தத்தெடுத்துள்ளோம். இவர்களுக்குத் தேவையான கல்வியை நாங்கள்கொடுப்போம். செலவு முழுவதையும் நாங்களே ஏற்போம்.விரைவில் இந்தக் குழந்தைகளை திரிஷாவிடம் அழைத்துச் சென்றுஅறிகப்படுத்தவுள்ளோம். இதேபோல ரத்ததான முகாமும் நடத்தவுள்ளோம் என்றார்.தத்தெடுப்பு குறித்து திரிஷா கூறுகையில்,இந்த செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மிக உயர்வான காரியம் இது.என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் இதுபோன்ற நல்ல காரியங்களை ரசிகைகள்செய்கிறார்கள் என்றார்.உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம்தான்...

By Staff
தென்னிந்திய கனவு தேவதை திரிஷா ரசிகைகள் சங்கம் 11 அனாதைக் குழந்தைகளைதத்தெடுத்துள்ளனர்.

நடிகர்களுக்கு இருப்பது போல நடிகைகளுக்கு தமிழகத்தில் ரசிகர் மன்றம் இல்லை.அதிலும் ரசிகை மன்றம் எல்லாம் இல்லே இல்லாமல் இருந்தது.

முன்பு குஷ்புவுக்கு தான் ரசிகர் மன்றம் இருந்தது. கோவில் கூட கட்டி பயபக்தியுடன்கும்பிட்டனர். பிறகு சிம்ரனுக்கு ரசிகர் கூட்டம் இருந்தது. ஆனாலும் கோவில்அளவுக்கு அவர்கள் உணர்ச்சிவசப்படவில்லை.

இப்போது திரிஷாவுக்கு முதல் முறையாக சென்னையில் ரசிகை மன்றம்தொடங்கப்பட்டுள்ளது. வடபழனியில் திறக்கப்பட்ட இந்த மன்றத்தின் சார்பில்திரிஷாவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் எல்லாம் செய்து அசத்தினார்கள்ரசிகைகள்.

ரசிகை மன்றத்தை வரவேற்ற திரிஷா,நநில்ல விஷயத்திற்காக மன்றம் பாடுபடவேண்டும். அப்படிச் செய்தால் நானும் அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களதுசேவையில் பங்கேற்பேன் என்றார்.

இந் நிலையில், 11 அனாதைக் குழந்தைகளை திரிஷா ரசிகை மன்றத்தினர்தத்தெடுத்துள்ளனர். அதில் ஒரு குழந்தை மன வளர்ச்சி குன்றிய குழந்தையாம்.

இதுகுறித்து மன்றத் தலைவி ஜெசி கூறுகையில், இந்தக் குழந்தைகளை நாங்கள் முழுமனதோடு தத்தெடுத்துள்ளோம். இவர்களுக்குத் தேவையான கல்வியை நாங்கள்கொடுப்போம். செலவு முழுவதையும் நாங்களே ஏற்போம்.

விரைவில் இந்தக் குழந்தைகளை திரிஷாவிடம் அழைத்துச் சென்றுஅறிகப்படுத்தவுள்ளோம். இதேபோல ரத்ததான முகாமும் நடத்தவுள்ளோம் என்றார்.

தத்தெடுப்பு குறித்து திரிஷா கூறுகையில்,

இந்த செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மிக உயர்வான காரியம் இது.என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் இதுபோன்ற நல்ல காரியங்களை ரசிகைகள்செய்கிறார்கள் என்றார்.

உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம்தான்...

More from Filmibeat

Read more about: trisha fans adopt children
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X