மன அழுத்தத்தைக் குறைக்கும் நண்பர்கள்- த்ரிஷா

இந்தி காட்டா மீட்டா படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா, கமலின் புதுப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.
ஹைதராபாத்தில் திரிஷா அளித்த பேட்டி வருமாறு:
முன்பு போல நான் படங்களில் நடிப்பதில்லை. நானாத்தான் குறைச்சிக்கிட்டேன். இரண்டு வருஷத்துக்கு முன்பே இந்த முடிவை எடுத்தேன். வர்ற எல்லா படத்திலும் நடிக்க கூடாது. நல்ல கதைனா நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
இன்னொன்று, மக்களுடன் கொஞ்ச நாள் சேர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பு கிறேன். சினிமாவுக்கு வரும் முன் யார் கிட்டயும் அதிகம் பேசுறது இல்லை. இப்ப வாய் திறந்தால் மூடுறது இல்லை. இதுதான் என் மாற்றங்கள்.
நடிகைகளுக்கு சினிமா வாழ்வு குறைவுதான். இதில் 9 ஆண்டுகள் நான் நிலைத்து இருப்பது பெரிய விஷயம். நிறைய பேர் காணாமல் போய்விட்டனர். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காததுதான் இதற்கு காரணம்.
பணத்துக்கு ஆசைப்பட்டு வர்ற படங்களையெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டேன். தரத்தையும் நம்புகிறேன்.
என்னைப் பத்தி நிறைய கிசுகிசுக்கள் வருது. அதை குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து படித்து சிரிப்போம் பிறகு அதை மறந்து விடுவோம்.
சமீபத்தில் எனது அப்பாவுக்காக நான் ஐதராபாத்தில் நட்சத்திர ஓட்டல் கட்டுவதாக கிசு கிசு வந்தது.
எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் நண்பர்களோட சுத்தறதுதான். அவர்கள் தான் என் மன அழுத்தத்தை குறைக்கிறார்கள்.
எனக்கு பண ஆசை இல்லை. வாழ்க்கை ரொம்ப சிறியது. சேர்த்து வைத்து என்ன பயன். பிடித்தமானவர்களுக்கு செலவு செய்வேன்..." என்றார் த்ரிஷா.


Click it and Unblock the Notifications











