திரிஷாவின் குடும்பம் பற்றி தெரியுமா?.. யாருக்கும் பேச தகுதியே இல்லை.. தயாரிப்பாளர் கொளுத்திய சரவெடி
சென்னை: நடிகை திரிஷாதான் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருக்கிறார். சங்கீதா விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்ட சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக ஜோடி போட்டு வந்தார்கள். இந்த செயலில் பலரும் திரிஷாவை எதிர்த்து வருகிறார்கள். திரைத்துறையிலிருந்தும் அதே மாதிரியான குரல்கள் பெரும்பாலும் கேட்கின்றன. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
நடிகர் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கேட்டிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் திரிஷாவுடன் ஜோடி போட்டு விஜய் ஒரு திருமணத்துக்கு வந்தது மேற்கொண்டு பரபரப்பை இந்த விஷயத்தில் கூட்டியது. அவரது ரசிகர்களே இதை எதிர்க்கிறார்கள். அதுமட்டுமின்றி பார்த்திபன், சமுத்திரகனி உள்ளிட்டோரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள். இப்படி பெரும்பாலானோர் திரிஷாவுக்கு எதிரான மனப்பான்மையிலேயே இருக்கிறார்கள்.

டி.ஆர்.ரமேஷ் பேட்டி: இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் இதுகுறித்து ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார். அவர் கொடுத்த பேட்டியில், "தமிழ் சினிமாவில் திரிஷா ஒரு போராளியான பெண். கேடி படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக வந்திருந்தார். அவர் மைலாப்பூரை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் திரிஷா, விஜய்யை பற்றி பேசுவதற்கு யாருமே யோக்கியதை கிடையாது. திரிஷாவின் அம்மா எனக்கு நல்ல பழக்கம். ஒரு பாட்டி இருக்கிறார். அந்த குடும்பமே குணமான குடும்பம்தான். தவறான ஆட்கள் கிடையாது.
யாருக்கும் புத்தியே கிடையாது: அவரை பற்றி சோஷியல் மீடியாவில் பேசுபவர்களுக்கு புத்தியே கிடையாது. சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை நான்தான் முதலில் தயாரித்தேன். விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட் காம்போவை மீண்டும் நடிக்க வைக்க நினைத்து திரிஷாவை ஹீரோயினாக புக் செய்தேன். 60 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசி 10 லட்சம் ரூபாயை அவருக்கு அட்வான்ஸாக கொடுத்தேன். திண்டுக்கல்லில் நடந்த ஷூட்டிங்கிற்கு டிக்கெட் போட்டும் அவரை அனுப்பி வைத்தேன்.
மாட்டிக்கொண்ட சிம்பு: ஆனால் தங்கதுரை, மைக்கேல் ராயப்பான் போன்றவர்கள்தான் திரிஷாவை நீக்கிவிட்டு தமன்னாவை உள்ளே கொண்டு வந்தார்கள். இதற்கிடையே ஸ்ரேயாவையும் ஹீரோயினாக கமிட் செய்தார்கள். சிம்புவுக்கு இதை நினைத்து கோபம். வடிவேலுவுடன் ஜோடி போட்ட ஸ்ரேயாவுடன் எப்படி நடிப்பது என கேட்டார். ஹீரோயின் மாறியதால்தான் அந்தப் படம் பிரச்னையை சந்தித்தது. படம் முழுதாகவே குழப்பமாகிவிட்டது. மைக்கேல் ராயப்பான் ஏமாற்றி சம்பாதித்துவிட்டார். சிம்பு மாட்டிக்கொண்டார்.
திருப்பி தந்த திரிஷா: அந்த நேரத்தில் மொத்தம் திரிஷா ஐந்து படங்கள் செய்தார். இந்தப் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் சரியாக நடக்கவில்லை. நான் திரிஷாவுக்கு கொடுத்த பத்து லட்சம் ரூபாயை அப்படியே திருப்பி கொடுத்துவிட்டார் அவரது அம்மா. இல்லை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த படத்தில் கணக்கு செய்துகொள்ளலாம் என சொன்னேன். அதற்கு அவரோ, 'என் பொண்ணு ஃப்ரேமில் நடிக்காவிட்டால்; அந்தப் பணத்தை நாங்கள் பயன்படுத்தமாட்டோம்' என சொல்லிவிட்டார்.
திரிஷா அப்படி செய்தார்: திரிஷாவின் குடும்பம் தங்கமான குடும்பம். அந்தக் குடும்பத்தில் ஆண்கள் கிடையாது. அவரது ட்ரைவர் ஒரு திருட்டு கேஸில் மாட்டினார். உடனே வேலையை விட்டு தூக்கிவிட்டார். இப்படி எந்தத் தவறுக்கும் உடந்தையாகாத குணம் திரிஷாவுடையது. தவறான ஆட்களுடன் பழகாதவர் அவர். அந்த குடும்பத்தை பற்றி பேசுவதற்கு யாருக்கும் யோக்கியதை இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications















