விஜய்தான் எனக்குப் பொருத்தம்: திரிஷா நானும், விஜய்யும் நடித்த படங்கள் சூப்பர் ஹிட். எனக்கு பொருத்தமான நடிகர் விஜய் என்பதில் எனக்கு ரொம்பப் பெருமைஎன்று கூறியுள்ளார் திரிஷா.பத்த வைத்ததும் பரபரவென பற்றிக் கொண்டு சடசடவென வெடிக்கும் சரவெடி போல ஃபீல்டில் நுழைந்தது முதல் திரையுலகைதொடர்ந்து கலகலக்க வைத்துக் கொண்டுள்ளார் திரிஷா.தமிழில் அறிமுகமான இவர் இப்போது தெலுங்கிலும் நம்பர் ஒன். தமிழிலும் தனது முதலிடத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டுள்ளார். எப்படி ஜோதிகா ஒரு படத்தில் இருந்தால் அந்தப் படம் படு ஜாலியாக போகுமோ, அதேபோல திரிஷா படத்தில்இருந்தாலும் அது கலக்கலாக அமைந்து விடுகிறது.சாமி படத்திலிருந்துதான் இந்த மாமி ஸ்டார் நடிகையானார். அதற்கு முன்னர் நடித்த படங்கள் திரிஷாவுக்கு பெரிய அளவில்பெயர் வாங்கித் தரவில்லை. ஆனால் சாமி மூலம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பிற்க நேரமில்லாமல் படு வேமாகஓடிக் கொண்டிருக்கிறார் திரிஷா.அவ்வப்போது தெலுங்குப் பக்கம் போய் விட்டு சப்தம் போடாமல் ஏதாவது ஹிட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கும் திரிஷாஇப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி, அப்புறம் ஜெயம் ரவியுடன் சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.3 படங்களிலுமே அவருக்கும் நல்ல முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். இதனால் ரொம்ப ஜாலியாக நடித்து வருகிறார் இந்தபேபி. விஜய் கூட நீங்க நடிச்ச படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகிறதே அது எப்படி என்று திரிஷாவைத் தீண்டியபோது,அதில் எனக்கும் சந்தோஷம்தான். நாங்க ரெண்டு பேரும் சூப்பரான ஜோடி என்று கூறுகிறார்கள். எனக்கும் அப்படித்தான்தோன்றுகிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு இது புதிதில்லை. இதற்கு முன்பும் இதுபோல பல ஜோடிகள் இருந்துள்ளனர்.முதலில் கில்லி, அப்புறம் திருப்பாச்சி, இப்போது ஆதி என 3வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளேன். முதல் இருபடங்களையும் விட மிகச் சிறந்த ஹிட் படமாக ஆதி அமையும். அதில் எனக்கு அட்டகாசமான கேரக்டர். கில்லி மாதிரி இதிலும்பின்னிவிடுவேன்.தமிழ்ப் படங்களில் அதிகமாக ககாணப்படுவதில்லையே?அப்படியெல்லாம் இல்லை. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். ஆனால் தமிழில் 3 படங்கள்செய்கிறேன். எனவே தமிழை நான் புறக்கணிக்க மாட்டேன். அதை விட முக்கியமாக ரஜினி, கமல்சாருடன் இணைந்து ஒருபடத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது ஆசை. நிச்சயமாக அது கைகூடும் என்று எதிர்பாபக்கிறேன்.மனசில் ஏதாவது ஏக்கம், கவலை?நிறைய இருக்குங்க. தெலுங்குப் படவுலகில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்கள். அத்தைன பேரும் சக நடிகைகள்தான்.என்னோட படத்தைப் பார்த்து அவங்க கமெண்ட் செய்வாங்க, நானும் அவங்களோட படத்தைப் பத்தி கருத்துக்களைச்சொல்வேன். ரொம்ப நல்ல நண்பர்கள் ஆவார்கள்.ஆனால் தமிழ்த் திரையுலகில் அப்படி யாரும் இல்லை எனக்கு. இங்கே உள்ள பல நடிகைகள் சக நடிகைகளை போட்டியாகத்தான்பார்க்கிறார்கள். நட்போடு யாரும் பார்ப்பதில்லை. எனவே இங்கே எனக்கு தோழிகள் ரொம்பக் குறைச்சல்.திரிஷாவின் ஆதங்கத்தை தணிக்கப் போவது யாரோ?

By Staff

நானும், விஜய்யும் நடித்த படங்கள் சூப்பர் ஹிட். எனக்கு பொருத்தமான நடிகர் விஜய் என்பதில் எனக்கு ரொம்பப் பெருமைஎன்று கூறியுள்ளார் திரிஷா.

பத்த வைத்ததும் பரபரவென பற்றிக் கொண்டு சடசடவென வெடிக்கும் சரவெடி போல ஃபீல்டில் நுழைந்தது முதல் திரையுலகைதொடர்ந்து கலகலக்க வைத்துக் கொண்டுள்ளார் திரிஷா.

தமிழில் அறிமுகமான இவர் இப்போது தெலுங்கிலும் நம்பர் ஒன். தமிழிலும் தனது முதலிடத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டுள்ளார். எப்படி ஜோதிகா ஒரு படத்தில் இருந்தால் அந்தப் படம் படு ஜாலியாக போகுமோ, அதேபோல திரிஷா படத்தில்இருந்தாலும் அது கலக்கலாக அமைந்து விடுகிறது.

சாமி படத்திலிருந்துதான் இந்த மாமி ஸ்டார் நடிகையானார். அதற்கு முன்னர் நடித்த படங்கள் திரிஷாவுக்கு பெரிய அளவில்பெயர் வாங்கித் தரவில்லை. ஆனால் சாமி மூலம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பிற்க நேரமில்லாமல் படு வேமாகஓடிக் கொண்டிருக்கிறார் திரிஷா.


அவ்வப்போது தெலுங்குப் பக்கம் போய் விட்டு சப்தம் போடாமல் ஏதாவது ஹிட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கும் திரிஷாஇப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி, அப்புறம் ஜெயம் ரவியுடன் சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

3 படங்களிலுமே அவருக்கும் நல்ல முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். இதனால் ரொம்ப ஜாலியாக நடித்து வருகிறார் இந்தபேபி. விஜய் கூட நீங்க நடிச்ச படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகிறதே அது எப்படி என்று திரிஷாவைத் தீண்டியபோது,

அதில் எனக்கும் சந்தோஷம்தான். நாங்க ரெண்டு பேரும் சூப்பரான ஜோடி என்று கூறுகிறார்கள். எனக்கும் அப்படித்தான்தோன்றுகிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு இது புதிதில்லை. இதற்கு முன்பும் இதுபோல பல ஜோடிகள் இருந்துள்ளனர்.

முதலில் கில்லி, அப்புறம் திருப்பாச்சி, இப்போது ஆதி என 3வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளேன். முதல் இருபடங்களையும் விட மிகச் சிறந்த ஹிட் படமாக ஆதி அமையும். அதில் எனக்கு அட்டகாசமான கேரக்டர். கில்லி மாதிரி இதிலும்பின்னிவிடுவேன்.


தமிழ்ப் படங்களில் அதிகமாக ககாணப்படுவதில்லையே?

அப்படியெல்லாம் இல்லை. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். ஆனால் தமிழில் 3 படங்கள்செய்கிறேன். எனவே தமிழை நான் புறக்கணிக்க மாட்டேன். அதை விட முக்கியமாக ரஜினி, கமல்சாருடன் இணைந்து ஒருபடத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது ஆசை. நிச்சயமாக அது கைகூடும் என்று எதிர்பாபக்கிறேன்.

மனசில் ஏதாவது ஏக்கம், கவலை?

நிறைய இருக்குங்க. தெலுங்குப் படவுலகில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்கள். அத்தைன பேரும் சக நடிகைகள்தான்.என்னோட படத்தைப் பார்த்து அவங்க கமெண்ட் செய்வாங்க, நானும் அவங்களோட படத்தைப் பத்தி கருத்துக்களைச்சொல்வேன். ரொம்ப நல்ல நண்பர்கள் ஆவார்கள்.

ஆனால் தமிழ்த் திரையுலகில் அப்படி யாரும் இல்லை எனக்கு. இங்கே உள்ள பல நடிகைகள் சக நடிகைகளை போட்டியாகத்தான்பார்க்கிறார்கள். நட்போடு யாரும் பார்ப்பதில்லை. எனவே இங்கே எனக்கு தோழிகள் ரொம்பக் குறைச்சல்.

திரிஷாவின் ஆதங்கத்தை தணிக்கப் போவது யாரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X