»   »  அசத்திய த்ரிஷா- விஜய் பெருமிதம் ஆதி படத்தில் என்னை விட த்ரிஷா மிகப் பிரமாதமாக நடித்துள்ளார் என்று விஜய் புகழ்ந்துள்ளார்.எஸ்.ஏ.சந்திரசேகரா (நம்ம எஸ்.ஏ.சந்திரசேகரன்தான், பேரை நியூமராலஜிபடி மாத்திக்கிட்டார்..) தயாரிப்பில் விஜய்- திரஷாநடிப்பில் உருவாகும் படம் ஆதி. இப்படத்தின் பாடல் கேசட் சென்னையில் வெளியிடப்பட்டது.நடிகர் விக்ரம் முதல் கேசட்டை வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய்யை வெகுவாக புகழ்ந்தார் விக்ரம். சூட்டிங்கிற்காகவெளிநாட்டில் இருந்ததால் அந்த விழாவில் விஜய்யால் பங்கேற்க முடியவில்லை.தற்போது படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ள விஜய், ஆதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில், டிரெய்லரை இயக்குனர் ரமணா வெளியிட, விஜய் பெற்றுக் கொண்டார்.விஜய் பேசுகையில், எனக்கு இடையில் ஒரு இரண்டு வருடங்கள் இறங்குமுகமாக இருந்தது. அப்போது எனக்கு நல்ல பிரேக்கொடுத்து (திருமலை படம் மூலம்), தலை நிமிர வைத்தவர் ரமணாதான். இந்தப் படத்தில் கதைதான் நாயகன். நான் கதைக்கு பக்க பலமான கேரக்டர், அவ்வளவு தான்.படத்தில் எனக்கும், த்ரிஷாவுக்கும் சமமான ரோல். இரண்டு பேரும் அட்டகாசமாக செய்துள்ளோம். ஆனால் என்னை விடத்ரிஷா பிரமாதமாக நடித்துள்ளார் என்றே நினைக்கிறேன். என்னுடன் அவர் இதற்கு முன்பு நடித்த படங்களை விட இதில் மிகஅருமையாக செய்துள்ளார். எனது அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர். படப்பிடிப்புத் தளத்திற்கு ஒருமுறை கூட வராமல், ரிமோட் மூலம் வேலைவாங்கினார். அவர் இதுவரை நல்ல அப்பாவாக இருந்தார், இப்போது நல்ல தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். பெருமையாகஇருக்கிறது என்றார் விஜய்.பின்னர் செய்தியாளர்கள் விஜய்யிடம், நீங்களும் விக்ரமும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிறதே என்றுகேட்டபோது, அப்படி நடந்தால் நல்லதுதான். விக்ரமுடன் சேர்ந்து நடிக்க நான் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறேன்என்றார்.ஆந்திராவில் என்.டி.ஆகின் பேரன் கல்யாண்ராம் நடித்து சில்வர் ஜூப்ளி கொண்டாடிய தெலுங்குப் படமான அத்தன் ஒக்கடேதான் இப்போது ஆதியாக தமிழில் ரீ-மேக் ஆகியிருக்கிறது. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.தமிழில் வாய்ப்புக்கள் தேடித் தேடி வந்தாலும் இப்போதைக்கு த்ரிஷா தெலுங்குக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்கும் படங்களுக்கான கதையை அவரது அம்மா உமா தான் கேட்டு முடிவு செய்கிறாராம்.

அசத்திய த்ரிஷா- விஜய் பெருமிதம் ஆதி படத்தில் என்னை விட த்ரிஷா மிகப் பிரமாதமாக நடித்துள்ளார் என்று விஜய் புகழ்ந்துள்ளார்.எஸ்.ஏ.சந்திரசேகரா (நம்ம எஸ்.ஏ.சந்திரசேகரன்தான், பேரை நியூமராலஜிபடி மாத்திக்கிட்டார்..) தயாரிப்பில் விஜய்- திரஷாநடிப்பில் உருவாகும் படம் ஆதி. இப்படத்தின் பாடல் கேசட் சென்னையில் வெளியிடப்பட்டது.நடிகர் விக்ரம் முதல் கேசட்டை வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய்யை வெகுவாக புகழ்ந்தார் விக்ரம். சூட்டிங்கிற்காகவெளிநாட்டில் இருந்ததால் அந்த விழாவில் விஜய்யால் பங்கேற்க முடியவில்லை.தற்போது படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ள விஜய், ஆதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில், டிரெய்லரை இயக்குனர் ரமணா வெளியிட, விஜய் பெற்றுக் கொண்டார்.விஜய் பேசுகையில், எனக்கு இடையில் ஒரு இரண்டு வருடங்கள் இறங்குமுகமாக இருந்தது. அப்போது எனக்கு நல்ல பிரேக்கொடுத்து (திருமலை படம் மூலம்), தலை நிமிர வைத்தவர் ரமணாதான். இந்தப் படத்தில் கதைதான் நாயகன். நான் கதைக்கு பக்க பலமான கேரக்டர், அவ்வளவு தான்.படத்தில் எனக்கும், த்ரிஷாவுக்கும் சமமான ரோல். இரண்டு பேரும் அட்டகாசமாக செய்துள்ளோம். ஆனால் என்னை விடத்ரிஷா பிரமாதமாக நடித்துள்ளார் என்றே நினைக்கிறேன். என்னுடன் அவர் இதற்கு முன்பு நடித்த படங்களை விட இதில் மிகஅருமையாக செய்துள்ளார். எனது அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர். படப்பிடிப்புத் தளத்திற்கு ஒருமுறை கூட வராமல், ரிமோட் மூலம் வேலைவாங்கினார். அவர் இதுவரை நல்ல அப்பாவாக இருந்தார், இப்போது நல்ல தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். பெருமையாகஇருக்கிறது என்றார் விஜய்.பின்னர் செய்தியாளர்கள் விஜய்யிடம், நீங்களும் விக்ரமும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிறதே என்றுகேட்டபோது, அப்படி நடந்தால் நல்லதுதான். விக்ரமுடன் சேர்ந்து நடிக்க நான் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறேன்என்றார்.ஆந்திராவில் என்.டி.ஆகின் பேரன் கல்யாண்ராம் நடித்து சில்வர் ஜூப்ளி கொண்டாடிய தெலுங்குப் படமான அத்தன் ஒக்கடேதான் இப்போது ஆதியாக தமிழில் ரீ-மேக் ஆகியிருக்கிறது. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.தமிழில் வாய்ப்புக்கள் தேடித் தேடி வந்தாலும் இப்போதைக்கு த்ரிஷா தெலுங்குக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்கும் படங்களுக்கான கதையை அவரது அம்மா உமா தான் கேட்டு முடிவு செய்கிறாராம்.

Subscribe to Oneindia Tamil
ஆதி படத்தில் என்னை விட த்ரிஷா மிகப் பிரமாதமாக நடித்துள்ளார் என்று விஜய் புகழ்ந்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகரா (நம்ம எஸ்.ஏ.சந்திரசேகரன்தான், பேரை நியூமராலஜிபடி மாத்திக்கிட்டார்..) தயாரிப்பில் விஜய்- திரஷாநடிப்பில் உருவாகும் படம் ஆதி. இப்படத்தின் பாடல் கேசட் சென்னையில் வெளியிடப்பட்டது.

நடிகர் விக்ரம் முதல் கேசட்டை வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய்யை வெகுவாக புகழ்ந்தார் விக்ரம். சூட்டிங்கிற்காகவெளிநாட்டில் இருந்ததால் அந்த விழாவில் விஜய்யால் பங்கேற்க முடியவில்லை.

தற்போது படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ள விஜய், ஆதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில், டிரெய்லரை இயக்குனர் ரமணா வெளியிட, விஜய் பெற்றுக் கொண்டார்.

விஜய் பேசுகையில், எனக்கு இடையில் ஒரு இரண்டு வருடங்கள் இறங்குமுகமாக இருந்தது. அப்போது எனக்கு நல்ல பிரேக்கொடுத்து (திருமலை படம் மூலம்), தலை நிமிர வைத்தவர் ரமணாதான்.

இந்தப் படத்தில் கதைதான் நாயகன். நான் கதைக்கு பக்க பலமான கேரக்டர், அவ்வளவு தான்.

படத்தில் எனக்கும், த்ரிஷாவுக்கும் சமமான ரோல். இரண்டு பேரும் அட்டகாசமாக செய்துள்ளோம். ஆனால் என்னை விடத்ரிஷா பிரமாதமாக நடித்துள்ளார் என்றே நினைக்கிறேன். என்னுடன் அவர் இதற்கு முன்பு நடித்த படங்களை விட இதில் மிகஅருமையாக செய்துள்ளார்.

எனது அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர். படப்பிடிப்புத் தளத்திற்கு ஒருமுறை கூட வராமல், ரிமோட் மூலம் வேலைவாங்கினார். அவர் இதுவரை நல்ல அப்பாவாக இருந்தார், இப்போது நல்ல தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். பெருமையாகஇருக்கிறது என்றார் விஜய்.

பின்னர் செய்தியாளர்கள் விஜய்யிடம், நீங்களும் விக்ரமும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிறதே என்றுகேட்டபோது, அப்படி நடந்தால் நல்லதுதான். விக்ரமுடன் சேர்ந்து நடிக்க நான் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறேன்என்றார்.

ஆந்திராவில் என்.டி.ஆகின் பேரன் கல்யாண்ராம் நடித்து சில்வர் ஜூப்ளி கொண்டாடிய தெலுங்குப் படமான அத்தன் ஒக்கடேதான் இப்போது ஆதியாக தமிழில் ரீ-மேக் ஆகியிருக்கிறது. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.

தமிழில் வாய்ப்புக்கள் தேடித் தேடி வந்தாலும் இப்போதைக்கு த்ரிஷா தெலுங்குக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்கும் படங்களுக்கான கதையை அவரது அம்மா உமா தான் கேட்டு முடிவு செய்கிறாராம்.


Read more about: trisha is best actress vijay
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil