என்னை Troll பண்றவங்க கோழைங்க! .. குஷ்பு பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான குஷ்பு சமீப காலமாக முழு நேரமாக அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Recommended Video
அண்மையில் சில விஷமிகளால் குஷ்பூவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. அது குறித்து பரவலாக செய்திகள் வந்தன.
தன்னுடைய அரசியல் கருத்துகள் குறித்தும் இன்னும் சில விஷயங்கள் குறித்தும் ஒன் இந்தியா க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு குஷ்பூ பேட்டியளித்துள்ளார்.

13 லட்சம் ஃபாலோவர்ஸ்
தங்களுடைய 13 லட்சம் ஃபாலோவர்ஸ்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ட்விட்டரில் தான் அரசியல் சார்ந்த விஷயங்களை மட்டுமே பதிவிட்டு வருகிறேன், இன்ஸ்டாக்ராமில் நண்பர்கள் & குடும்பத்தினர் உடன் இணைப்பில் இருக்கிறேன், இதில் உள்ள ஃபாலோவர்ஸ்களை தாண்டி தான் பதிவிடும் கருத்துக்களை பார்க்க நிறைய பேர் உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trollers கோழைகள்
Troll செய்பவர்களை குறித்து பேசிய குஷ்பு அவர்கள் கோழைகள் என சுட்டிக்காட்டியுள்ளார். தன்னுடைய முகத்தை காட்டிக்காமல், அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வேற ஒரு அக்கவுண்டில் இருந்து Troll செய்பவர்கள் தைரியமில்லாத கோழைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாத்த திரைப்படம்
முழுநேர சினிமாவில் ஈடுபடுவது குறித்து பேசிய குஷ்பு அதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். கடைசி 21 வருடங்களில் தான் 5,6 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன், தற்போது அண்ணாத்த & ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார். நல்ல கதை, கதாபாத்திரம் அமைந்தால் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

சிறந்த தலைவர்
தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் குறித்து பேசிய குஷ்பு, அந்த கட்சியில் 5 வருடம் பணியாற்றியுள்ளேன், அவர் மேயர் ஆக இருந்து சென்னையை சிங்கார சென்னையாக மாற்றினார். அரசியல் களத்தில் 45 வருடம் உழைத்துள்ளார் & அவர் சிறந்த தலைவர் எனவும் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.


Click it and Unblock the Notifications











