குழந்தை பிறந்ததும்.. 6 மாசம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. சீரியல் நடிகை கண்ணீர்!

சென்னை: செல்லமடி நீ எனக்கு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் கிட்டத்தட்ட 19 வருடத்திற்கும் மேலாக சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் பல தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். youtube சேனலுக்கு பேட்டி அளித்த ஸ்ரீதேவி அசோக் குழந்தை பிறந்த பிறகு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்து பேசி உள்ளார்.

அதில், நான் சீரியல் நடிக்க வந்ததே பெரிய போராட்டத்திற்கு பிறகு தான், குடும்பத்தில் பண பிரச்சனை இருந்ததால், அதிலிருந்து என் குடும்பத்தினரை பாதுகாப்பதற்காக தான், நான் நடிக்கவே வந்தேன். நடிகையாக வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஏன் நடிக்க வந்தோம் என பலமுறை என்னை நானே கேள்வி கேட்டு இருக்கிறேன். அப்போது என் மனதில் வந்த விஷயம் என் குடும்பம் தான். என்னை கஷ்டப்படுத்து வளர்த்த அப்பா, அம்மாவிற்கு நான் என்ன செய்யப் போகிறேன் அவர்களை பார்த்துக் கொள்ளும் நேரம் இதுதான் என்று தோன்றியதால் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். பிடிக்காமல் தான் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் இன்று விரும்பி நடித்து வருகிறேன் என்றார்.

நடிகை ஸ்ரீ தேவி அசோக்: தொடர்ந்து பேசிய நடிகை ஸ்ரீதேவி, இரண்டாவது குழந்தை பிறந்ததும் மூன்று மாதத்திலேயே நான் பொன்னி சீரியலுக்கு நடிக்க சென்றுவிட்டேன். ஒரு நாள் திடீரென என்னுடைய வலது காலில் உணர்ச்சியை இல்லாமல் ஆகிவிட்டது. காலை எடுத்துக்கூட வைக்க முடியவில்லை. நானும் என்ன என்னமோ செய்து பார்த்தேன் காலை நகர்த்த முடியவில்லை. வலி அதிகமாக இருந்ததால், மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்த போது தான், இருப்பு எலும்பில் வீக்கமும் சில பிரச்சனையும் இருப்பதாக கூறினார்கள். இதற்கு சர்ஜரி செய்ய வேண்டும் இல்லை என்றால் மாதத்திற்கு ஒரு ஸ்டெராய்டு ஊசி போட வேண்டும் என்றார்கள்.

TV Serial Sridevi ashok
Photo Credit:

படுத்த படுக்கையானேன்: எனக்கு ஆப்ரேஷனில் விருப்பம் இல்லாதால், தற்காலிகமாக சில மருந்துகளை எனக்கு எழுதி கொடுத்தார்கள். அந்த மாத்திரையை சாப்பிட்டால் என்னால் கொஞ்சநேரம் நடிக்க முடியும். ஆனால், அந்த மருந்தை உட்கொண்டால், குழந்தைக்கு பால் கொடுக்க முடியாது என்பதால் குழந்தைக்காக பாட்டிலில் முன்பே பாலை எடுத்து வைத்துவிட்டு அதன் பின் மாத்திரை போடுவேன். இப்படியே கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு மேலாக ஆயுர்வேதம், சித்தா, பிசியோதெரபி என பல மருத்துவர்களை சந்தித்து விட்டேன். எதிலுமே எனக்கு பலன் கிடைக்கவில்லை. என்னால் எழுந்து உட்காரக்கூட முடியாத நிலைடக்கு சென்று ஆறு மாதம் படுத்த படுக்கையாகி விட்டேன். இதற்கு மேல் ஸ்ரீதேவி வீல்சேரில் தான் என்ற நிலைமை வந்துவிட்டது.

கண்ணீர் பேட்டி: அந்த நேரத்தில் தான் என் தோழியின் மூலமாக பிசியோதெரபி ஒருவரிடம் இரண்டு முறை சிகிச்சைக்காக சென்றேன் நடக்க ஆரம்பித்துவிட்டேன். அவர் சொன்ன அட்வைஸின்படி இப்போது வரை நான் சில உடல் பயிற்சிகளை செய்து வருகிறேன். இப்பொழுதும் நான் அதிகமாக நடக்கக்கூடாது, ஜிம் ஒர்க் அவுட்டுக்களை செய்யக்கூடாது என சொல்லி இருக்கிறார். அதன்படியே நான் இப்போதும் பின்பற்றி வருகிறேன் இந்த விஷயம் என்னுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் தெரியும். சினிமா வட்டாரத்தில் யாருக்குமே இது தெரியாது. ஸ்ரீதேவிக்கு குழந்தை பிறந்து இருக்கிறது அதனால் அவர் ஓய்வில் இருக்கிறார் என்று மட்டும் தான் தெரியும். அந்த நேரத்தில் நான் பட்ட வேதனையை என்னால் மறக்கவே முடியாது என நடிகை ஸ்ரீ தேவி கண்கலங்கி பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X