விஜய் பையில் கத்தரிக்கோல் வைத்திருந்தது ஏன்? பின்னணியில் இருக்கும் ஜாதகம்.. அந்தணன் பேட்டி!

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கினின் சிபிஐ விசாரணையில் ஆஜராவதற்காக தவெக தலைவர் விஜய் மார்ச் 14ந் தேதி தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அப்போது அவரின் கை பையில் கத்திரிக்கோல் இருந்ததால், இறக்கிவிடப்பட்டார். இந்த செய்தி மீடியாவில் பேசுபொருளான நிலையில், விஜய் கத்தரிக்கோல் வைத்திருந்தது ஏன் என வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஜனவரி 12ஆம் தேதி ஆஜரானார். இதைத்தொடர்ந்து ஜனவரி 19ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அன்றைய தினம் ஆஜரானார். அன்றும் அவரிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது.

தவெக தலைவர் விஜய்: இதையடுத்து, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச்15ந் தேதி ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் வந்ததை அடுத்து ஆஜராவதற்காக விஜய், மார்ச் 14ந் தேதி நீலாங்கரை வீட்டில் இருந்து காரில் விமானம் நிலையம் வந்தார். தனி விமானத்தின் மூலம் டெல்லி செல்ல இருந்த நிலையில், விஜய் வைத்து இருந்த கை பையில் கத்திரிக்கோல் இருந்ததால், பைலட் விமானத்தை இயக்க முடியாது என கூறியதை அடுத்து விஜய் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டார். பின் பல கட்ட சோதனைகளுக்கு பின் விமானம் டெல்லி புறப்பட்டது. இந்த செய்தி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் பேட்டி அளித்துள்ளார்.

Vijay TVK Andhanan

என்ன காரணம்: அதில், விஜயின் கை பையில் ஒரு கத்திரிக்கோலும், ஆதவ் அர்ஜூனா பையில் ஒரு சரக்கு பாட்டிலும் இருந்தது. இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவில் பேசுபொருளாகி பரபரப்பாக பேசப்பட்டது இந்த கத்திரிக்கோலை விஜய் எதற்காக தனது கைப்பையில் கொண்டு போனார் என்றால், சில ஜோதிடர்கள் சொல்வார்கள், இது போன்ற ஒரு பொருளை கையில் வைத்திருந்தால், போகிற காரியம் வெற்றி அடையும் என்பார்கள். இப்படி யாரோ ஒரு ஜோதிடர் கத்திரிக்கோல் கையில் இருந்தால் சிபிஐ விசாரணையில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்று சொல்லி இருப்பார்.

ஜோதிடர் சொன்னாரா?: அதற்காக கூட விஜய் அந்த கத்திரிக்கோலை கொண்டு சென்று இருக்கலாம். எனக்கு அப்படி தான் தோன்றுகிறது. ஏனென்றால், பல ஜோசியர்கள் இப்படி செய்தால் நன்றாக இருக்கும், அப்படி செய்தால் அந்த பலன் கிடைக்கும் என சொல்கிறார்கள். எனக்கே அதுபோல சில விஷயங்கள் நடந்து இருக்கிறது. அதுபோல தான், யாரோ ஒரு ஜோதிடர் விஜயிடம் இந்த விஷயத்தை சொல்லி இருக்கலாம் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால், இந்த விஷயம் வெளியானவுடன் விஜய் எதற்காக கத்திரிக்கோலை கொண்டு சென்றார். இனிமேல் விஜயை இந்திய விமானத்துறை விமானத்தில் ஏற்றாது என்கிற அளவுக்கு செய்தியை பில்டப் செய்து வெளியிட்டார்கள்.

தேச துரோக குற்றமா?: அதேபோல ஆதவ் அர்ஜூனா ஒரு சரக்கு பாட்டிலை வைத்திருந்தார். இந்தியாவில் 99 சதவீதத்தினரை குடிக்க வைத்து விட்டீர்கள். ஒருவர் பாட்டிலை எடுத்து சென்றது பெரிய தேச துரோக குற்றம் போல சித்தரிப்பதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? விமான நிலையத்தில் செக்யூரிட்டி செக்கிங்கை முடித்துவிட்டு உள்ளே சென்றால், அங்கேயே சரக்கு கிடைக்கும் வாங்கிக்கொண்டு விமானத்தில் செல்லலாம். பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனி விமானத்தில் செல்லும்போது தனக்கு விருப்பமான ஒரு சரக்கை கையில் எடுத்து செல்வதில் என்ன தவறு இருக்கிறது என அந்தணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X