படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட காயம்.. விஜய் உதவியாளருக்கு பணம் கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை: இணையத்துக்குள் நுழைந்தாலே நடிகர் விஜய்யிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பர்சனல் உதவியாளராக இருந்த செல்வத்தின் பேட்டி தொடர்பான துணுக்கு வீடியோக்கள் தான் அதிகம் காணப்படுகிறது. விஜய் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான அதே நேரத்தில் திடுக்கிடும் தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் குருவி படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக தனது பேட்டியில் செல்வம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த பேட்டியில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் முதன் முதலில் தொடங்கப்பட்டு, விஜய்யை வைத்து குருவி என்ற படத்தை தயாரித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் ஒரு கல் குவாரியில் நடைபெறுகிறது. கற்கள் வெட்டப்படும் பாறைகளில் விஜய் ஏற வேண்டும் என்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. நான் ஒரு ஷார்ட்டுக்கும் மற்றொரு ஷார்ட்டுக்கும் இடையில் விஜய் சாருக்கு தேவையானதை அவருக்கு கொடுக்க வேண்டும்.

TVK Vijay Ex Assistant Interview About How Udhayanidhi Stalin Helped Him Kuruvi Shooting Spot Accident

உதவிய உதயநிதி ஸ்டாலின்: அப்படி அவருக்கு ஜூஸ் கொடுக்க வேண்டும் என்று நான் ஜூஸ் கொடுக்க ஓடினேன். அப்போது அந்த கல் குவாரியில் இருந்த ஒரு ஒரு கல், எனது காலில் ஏறி ரத்தம் வந்து கொண்டு இருக்கிறது. எனக்கு காயம் ஏற்பட்டது விஜய் சாருக்குத் தெரியும். ஆனாலும் அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் புரடெக்‌ஷன் தரப்பில் உடனே என்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது மட்டும் இல்லாமல், படத்தின் தயாரிப்பாளரான இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எனக்கு அப்போதே ரூபாய் 10 ஆயிரம் கொடுத்து மருத்துவ செலவுக்கு வைத்துக் கொள்ள உதவி செய்தார்" என்று தெரிவித்துள்ளார்.

ஷாக் தகவல்கள்: விஜய்யின் முன்னாள் உதவியாளர் செல்வம் அளித்த பேட்டியில் பலருக்கும் திடுக்கிடும் தகவலாக அமைந்தது, விஜய் செல்வத்தை தாக்கியது தான். புலி படத்தின் படப்பிடிப்பின்போது இரவு சாப்பிடும் போது சாப்பாட்டில் முடி இருந்ததற்காக விஜய் தன்னை கடுமையாக தாக்கினார் என்று தெரிவித்தார். இந்த தகவல் தற்போது மொத்த கோலிவுட் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X