twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர்கள் தான் பெரிய ஹீரோக்களை உருவாக்கியது.. OTT அல்ல.. உதயம் தியேட்டர் ஓனர் ‘நறுக்’ பேட்டி!

    |

    சென்னை: இந்த லாக்டவுனில் தியேட்டர் ஓனர்கள் படும் ஒட்டுமொத்த துயரத்தையும் உதயம் தியேட்டர் ஓனர் சண்முகம் அளித்த ஸ்பெஷல் பேட்டியில் கூறியுள்ளார்.

    Recommended Video

    இந்த மாதிரி LOCKDOWN-அ இதுவரைக்கும் நான் பார்த்தது இல்ல

    முன்னணி ஹீரோக்களை உருவாக்குவது தியேட்டர்கள் தான் என்றும், இப்படி OTT-ல் படங்களை அப்போதே வெளியிட்டு இருந்திருந்தால், எந்த ஹீரோவும் டாப் ஹீரோவாக ஆகி இருக்க முடியாது. அவர்களுக்கு இத்தனை பெரிய ரசிகர்கள் கூட்டமும் உருவாகி இருக்காது என 'நறுக்'கென' பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

    Udhayam Theater owner Shanmugam interview!

    அசோக் நகரின் அடையாள சின்னமாகவே மாறி இருக்கும் உதயம் தியேட்டர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

    எத்தனையோ வெற்றி, தோல்விகள், பேரிடர்களை சந்தித்து இருக்கும் நிலையில், இப்படியொரு லாக்டவுனை இதுவரை தனது வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என சண்முகம் கூறியுள்ளார்.

    தியேட்டர்கள் இயங்க வில்லை என்றாலும், அதனை பராமரிக்க வேண்டிய சூழல் மற்றும் குறைந்த பட்ச மின் கட்டணம், ஜி.எஸ்.டி போன்ற பல பிரச்சனைகளை தன்னை போல அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் இந்த கொரோனா காலத்தில் சந்தித்து வருவதை வேதனையுடன் கூறியுள்ளார்.

    ரெட் கலர் டாப்.. பின்னாடி அருவி.. இன்னாம்மா ஹாட்டா இருக்காரு நம்ம ஐஸ்வர்யா மேனன்!ரெட் கலர் டாப்.. பின்னாடி அருவி.. இன்னாம்மா ஹாட்டா இருக்காரு நம்ம ஐஸ்வர்யா மேனன்!

    கடந்த மார்ச் 17ம் தேதி போடப்பட்ட பூட்டு, இன்னும் திறக்காமல், ரசிகர்கள் கூட்டம், கொண்டாட்டம் இல்லாமல், நகரும் நாட்களை பார்க்கும் போது மிகுந்த மன வேதனை அடைவதாகவும் கூறியுள்ளார்.

    அரசு இந்த விவகாரத்தில் என்ன யோசனை சொல்கிறதோ, அதையே இதுவரை கேட்டு நடந்து வருவதாகவும், இனியும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும், விரைவில் இந்த பெருந்துயரில் இருந்து உலகம் மீண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் அவர் பேசியுள்ள முழு பேட்டியை வீடியோவில் கண்டு மகிழுங்கள்!

    English summary
    Udhayam theater owner Shanmugam talks lot about ongoing lockdown and other crisis suffered by theater owners due to pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X