»   »  சமத்துச் சேச்சி உதயதாரா!

சமத்துச் சேச்சி உதயதாரா!

Subscribe to Oneindia Tamil

உதயதாராவை படு பாசமாக புகழ்ந்து தள்ளுகிறார் கண்ணும் கண்ணும் படத்தின்இயக்குனர் மாரிமுத்து.

புதுமுக இயக்குனரான மாரிமுத்துவின் முதல் பிரசவமான கண்ணும் கணணும்படத்தின் படிப்பிடிப்பை முடிவை நெருங்கி விட்டது. படம் பிரமாதமாகவந்திருப்பதாக யூனிட்டார் சிலாகிக்கின்றனர்.

படத்தின் இயக்குநரிடம் போய் கேட்டாலோ, அட அதை ஏன் கேக்கறீங்க,உதயதாராவின் நடிப்பைப் பார்த்தால் அசந்து போய் விடுவீங்க, அப்படி ஒரு அசத்தல்,அமர்க்களம், பின்னிட்டார் என்று புகழ்ந்து தள்ளுகிறார்.

உதயதாராவைப் பற்றி பேச ஆரம்பித்தால் மாரிமுத்து ஜில்லாகி விடுகிறார். உதயாதாரஎப்படி நடித்திருக்கிறார் என்று ஒப்புக்கு ஆரம்பித்து வைத்தோம். உடனே திறந்தார்வாயை, இப்படி ஒரு திறமையான, அழகான நடிகையை நான் பார்த்ததே இல்லை.

நல்ல அழகு, அபார நடிப்புத் திறமை, தேவையில்லாமல் பேசுவது கிடையாது,காட்சியை விளக்கினால் கப்பென்று கற்பூரம் மாதிரி பற்றிக் கொண்டு அசத்திவிடுகிறார் உதயதாரா.

இந்தப் படத்தின் மூலம் உதயதாரா வெகுவாகப் பேசப்படுவார். அவருடையகேரக்டரின் பெயர் ஆனந்தி. நடுத்தரக் குடும்பத்துப் பெண். அந்தக் கேரக்டராகவேமாறி ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண் எப்படி இருப்பாள் என்பதற்கு உதாரணமாகமாறி நடித்துள்ளார் உதயதாரா.

குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்தபோது நல்ல மழை பெய்தது. பார்க்கவே படுரம்யமாக இருந்ததால் அந்த சிச்சுவேஷனில் சில காட்சிகளைப் படம் பிடிக்காலம் எனநினைத்தோம். ஆனால் அப்போதுதான் தனது காட்சிகளை முடித்து விட்டுஹோட்டலுக்குப் போயிருந்தார் உதயதாரா.

சரி கேட்டுப் பார்ப்போம் டயர்ட் ஆக இல்லாவிட்டால் ஷூட் செய்வோம் என்றுஉதயதாராவை அழைத்தோம். என்ன ஆச்சரியம் பாருங்கள், சட்டென்று ஓடி வந்துஉற்சாகமாக நடித்துக் கொடுத்து எங்களை அசத்தி விட்டார்.

படத்தில் உதயதாராவுக்கு மூன்று தங்கச்சிகள் உண்டு. அந்த கேரக்டர்களில்நடித்தவர்கள் இப்போது உதயதாராவுக்கு நிஜமான தங்கச்சிகள் போலாகி விட்டனர்.அவ்வளவு எளிமையாக பழகக் கூடியவர் உதயதாரா ....

சரி, சரி என்று மாரிமுத்துவை அடக்கி அமைதிப்படுத்துவதற்குள் போதும்போதுமென்றாகி விட்டது. சரி படத்தோட கதை என்னங்கண்ணா என்று கேட்டால், அதமட்டும் கேக்கப்படாது என்று கூறி எழுந்தோடி விட்டார்.

உதயதாராவுக்கு ஏகப்பட்ட பில்டப்புகளை கொடுப்பதைப் பார்த்தால் படம் படுரம்யமாக இருக்கும் போலிருக்கே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil