»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று கன்னடப் பட உலகில் பிரபலமாகவும், பரபரப்பாகவும் பேசப்படும் டைரக்டர் உபேந்திரா. இவர் டைரக்ட் செய்த "ஏ படத்தில் நடிக்கவேதாமிணியை தேர்வு செய்ததாகவும், ரொம்பவும் சின்னப் பெண்ணாக இருப்பதால் அந்தப் படத்தில் நடிக்கவில்லை.

அதை அடுத்து அவர் டைரக்ட் செய்த "சொல்ப அட்ஜஸ்ட் மாட் கோலி (கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க) என்ற படத்தில் அறிமுகமானேன் என்றுசொல்லும் தாமிணி, தமிழில் கார்த்திக் ஜோடியாக நடிக்க வேண்டி, மூவி டெஸ்ட்டுக்காக வந்த இடத்தில் வேறொரு படத்தில் வாய்ப்பு கிடைத்து விட்டதாகசொல்கிறார்.

தமிழில் அஜீத் - ஷாலினி நடித்த அமர்க்களம் படத்தை கன்னடத்தில் அசுரா என்ற பெயரில் எடுக்கிறார்கள். அந்தப் படத்தில் ராஜ்குமார் மகன்சிவராஜ்குமாருக்கு ஜோடியாக, ஷாலினி நடித்த வேடத்தில் நான் நடிக்கிறேன் என்று தன் பெரிய விழிகளை உருட்டியபடி கண்களால் பேசவும் கற்றுவைத்திருக்கிறார் தாமிணி.

தாமிணியின் சொந்தப் பெயர் சவிதா. அதை தாமிணியாக்கியவர் உபேந்திரா. தாமிணி என்றால் மின்னல் என்று பொருள்.

விவரம் தெரிந்த நாளிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆவலை வளர்த்துக் கொண்டதாகச் சொல்லும் தாமணியின் சொந்த ஊர் கர்நாடகாவில் உள்ளதார்வார் எங்க ஊர் பேடா (பால்கோவா) ரொம்ப பேமஸ் என்று சொல்லும் தாமிணிக்கு தமிழ் படங்களின் மீது தான் காதலாம்.

Read more about: act actress film tamil movie thamini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil