நல்ல கதை அமைந்தால் நடிப்பேன்.. மாஸ்டர் லலிதா ஷோபி பேட்டி!
சென்னை: நடன இயக்குநர் ஷோபி மாஸ்டரின் மனைவியும், பெண் நடன இயக்குநருமான லலிதா ஷோபியின் வி கனெக்ட் சாட்டின் இரு பாகங்களும் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ராஜமெளலியில் இருந்து பலர் இவரை, நடிக்க அழைத்திருந்தும் போகாத நிலையில், தனக்கு நடிப்பது பிடிக்கும், அதை தான் நாட்டியக் கலையில் பயன்படுத்தி பாடல்களுக்கு கொரியோகிராப் செய்து வருகிறேன்.

திருமணத்திற்கு முன்பு வரை சினிமா படங்களில் நடிக்கும் எண்ணம் உருவாகவில்லை. ஆனால், தற்போது, ஜோதிகா, மஞ்சு வாரியர், ஐஸ்வர்யா ராய், போல போல்டான கதாபாத்திரங்கள் கொண்ட நல்ல கதைகள் அமைந்தால் தான் நடிக்கவும் தயார் என லலிதா ஷோபி மனம் திறந்துள்ளார்.
உத்தம வில்லன், கென்னடி கிளப், கடாரம் கொண்டான், காசூரன் உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் மறைந்த பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கானின் மறைவு தன்னை மிகவும் பாதித்ததாகவும், அவரது கொரியோகிராபியில் ஒரு நாள் அவருக்கு அசிஸ்டென்டாக பணிபுரியும் பாக்கியம் தனக்கு கிடைத்த தருணத்தை நினைவு கூர்ந்த லலிதா, செட்டில் சரோஜ் கான் சிங்கம் போல இருப்பார் என்றும் பேசினார்.
மேலும், அஜித் சாருக்கு டான்ஸ் பண்ண ரொம்ப பிடிக்கும் என்றும், தளபதி விஜய் பற்றியும் பேசியுள்ள முழு வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











