நாளை ரிலீசாகுது நானியின் ‘V’.. செகண்ட் ஹீரோ சுதிர் பாபுவின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இதோ!

சென்னை: நடிகர் நானியின் 'V' படம் நாளை (செப்.,5) அமேசான் பிரைமில் வெளியாகிறது.

Recommended Video

'V' ஒரு RARE SCRIPT | ACTOR SUDHEER BABU EXCLUSIVE | FILMIBEAT TAMIL

இந்த படத்தின் நானியுடன் இணைந்து நடித்துள்ள இன்னொரு டோலிவுட் ஹீரோவான சுதிர் பாபுவின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி தற்போது நமது தமிழ் ஃபிலிமி பீட் யூடியூப் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தியேட்டர்கள் திறக்காத நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து இந்திய மொழி படங்களும் ஒடிடி தளத்தில் தங்கள் படங்களை வெளியிட்டு வருகின்றன.

‘V’ movie second hero Sudhir Babu exclusive interview!

இதற்கு தியேட்டர் ஓனர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தாலும், காலத்தின் கட்டாயத்தை மனதில் வைத்து நடிகர்கள் ஒடிடியில் படங்களை பல எதிர்ப்புகளையும் மீறி ரிலீஸ் செய்து வருகின்றனர்.

நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தெலுங்கு நடிகர் நானி, தன்னை ஆஸ்தா சம்மா படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் மோகன கிருஷ்ணாவுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

நாளை வெளியாகவுள்ள 'V' படம் குறித்து பேட்டியில் விவரமாக பேசியுள்ள தெலுங்கு நடிகர் சுதிர் பாபு, இந்த படத்தின் கதை வித்தியாசமானது. இதற்கு முன் டோலிவுட் சினிமா பார்க்காத கதை எனவும் ஹைப்பை எகிற வைத்துள்ளார்.

மேலும், தனக்கு பிடித்த தமிழ் படம் விக்ரம் வேதா என்றும், நடிகர் மாதவன் மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் நானி, சுதிர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒடிடியில் நாளை ரிலீசாகவுள்ள V படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை க்ளிக் பண்ணுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X