»   »  'காமெடி படம் எடுக்க நான் ஒண்ணும் கோமாளி இல்லை..'- 'வாய்மை' இயக்குநரின் பொளேர் பேட்டி!

'காமெடி படம் எடுக்க நான் ஒண்ணும் கோமாளி இல்லை..'- 'வாய்மை' இயக்குநரின் பொளேர் பேட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மரண தண்டனையை மனித நேயத்துடன் எதிர்ப்பவர்கள் தான் இங்கே அதிகம். ஆனாலும் இன்னமும் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அந்த மரண தண்டமை ஒழிப்பையே கருவாக்கி ஒரு படம் எடுத்து அதை ரிலீஸுக்கும் கொண்டு வந்திருக்கிறார் வாய்மை இயக்குநர் அ.செந்தில் குமார்.

வாய்மை படம் எப்படிபட்ட படம்?


''சேது படத்துக்கு பிறகு யாரும் முதல் படத்துலேயே அதிர்ச்சியை கொடுக்கலை. அதை நான் பூர்த்தி பண்ணுவேங்கற நம்பிக்கை இருக்கு. அந்த அளவுக்கு சென்சிபிளான படமா இருக்கும். இந்த சமூகத்துல வீக்கா இருக்கறவங்களை முன்னேத்தத்தான் எல்லா சிஸ்டமும். ஆனா எல்லா சிஸ்டமுமே வீக்கா இருக்கறவங்களை இன்னும் வீக்காத்தான் மாத்துது... இதுதான் படத்தோட ஒன்லைன். உலகம் முழுக்க இருக்கற ஒரு பிரச்னையைதான் சொல்லியிருக்கேன்.வாய்மைகற டைட்டிலுக்கு அர்த்தம் என்னனா வார்த்தைகள்கறது வெறும் வார்த்தைகள் இல்லை. அதுதான் வாழ்க்கைகறதுக்காக தான் வாய்மைனு பேர் வெச்சேன். படத்துல ஒரு அதிர்ச்சி காத்திருக்கு. அதுக்காக விளிம்புநிலை மனிதர்களை பத்தி சொல்றோம்னு ஆடியன்ஸை கசக்கி பிழியமாட்டேன். படம் பார்க்கிற ஆடியன்ஸ் திருப்தியா திரும்புவாங்க. பேச்சுதான் படத்தோட அடிப்படையா இருக்கும். நெருப்புனு சொன்னாலே சுடணும்.''


Vaaimai is bold script, no a comedy - Director Senthil Kumar Interview

''லைட் சப்ஜெக்ட் படங்கள் ஜெயிக்கிற இந்த ட்ரென்டுக்கு சென்சிபிள் படம் ஜெயிக்கும்னு நம்புறீங்களா?''


''சில பேர் நல்ல படம் பண்ணுவாங்க... சில பேர் பெரிய படம் பண்ணுவாங்க. நான் பெரிய நல்ல படம் பண்ணியிருக்கேன். மனிதநேயம் தான் படத்தோட கரு. நீங்க சொல்ற காமெடி படங்கள்ல காமெடியே இருக்கறதில்லை. எதுக்கு ஆடியன்ஸ் சிரிக்கிறாங்கன்னே தெரிய மாட்டேங்குது. காமெடி படம் எடுக்க நான் ஒண்ணும் கோமாளி இல்லை. ஆடியன்ஸோட ரசனையை வளர்த்து அதுல ஒரு நல்ல விஷயம் சொல்லணும். பேய் படங்களாவும், காமெடி படங்களாவும் வர்றதால என் படம் ஃப்ரெஷா தெரியும். அது நல்லதுதானே?''


'' சாந்தனு, மனோஜ், பிரித்வினு எல்லாருமே ப்ரேக் தேவைப்படற ஆட்கள் ஆச்சே?''


''என்னோட மானசீக குருவே பாக்யராஜ் சார்தான். அவர் படங்கள் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவர் பையனை இயக்குற வாய்ப்பு கிடைச்சது பெரிய விஷயம். மூணு பேருக்குமே இந்த படம் பெரிய ப்ரேக் தரும். தனித்தனியா மூணு பேருக்கும் இருக்கற பலங்களை கவனிச்சு எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்துக் கொடுத்துருக்கேன்''.


"படத்தைப் பாராட்டி போராளி பேரறிவாளன் கடிதம் கொடுத்தாராமே?"


"இதை என் படத்தோட ட்ரெய்லரிலேயே பயன்படுத்தியிருக்கேன். இது மரண தண்டனைக்கு எதிரான படமே தவிர மூவர் தூக்கு சம்பந்தப்பட்ட படம் கிடையாது. ஆனால் பேரறிவாளனோட வாழ்க்கையோட கதை ஒத்துப்போகும். அப்பாவியான தன் மகனுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை என்னும் அநீதியை எதிர்த்து ஒரு தாய் போராடுவதுதான் கதை. பேரறிவாளன், அற்புதம் அம்மாள் இரண்டு பேரிடமுமே அனுமதி வாங்கிவிட்டேன். நான் பப்ளிசிட்டிக்காக இந்த விஷய்த்தை கையில் எடுக்கவில்லை."


"பேரறிவாளன் என்ன சொன்னார்?"


"அண்ணனையோ, அம்மாவையோ சந்திக்க லேசாக பயந்தது உண்மைதான். நான் அவர்களுக்கு ஆதரவாக படம் எடுத்தாலும் கூட சினிமா என்பது கமர்ஷியல் உலகம். அதனாலேயே யோசித்தேன். ஆனால் அம்மாவுடன் சென்று அண்ணனை இரண்டு முறை சந்தித்தது எனக்கு கிடைத்த மகானுபவம். கதையை கேட்டுவிட்டு திருத்தங்கள் சில சொன்னார். அவருக்கு சினிமா போன்ற ஊடகம் மூலம் அவரது போராட்டம் வெளியில் வருவதில் மகிழ்ச்சிதான்".


"படத்தில் அரசியல் அதிகம் இருக்குமா?"


"படத்தில் ஒரு இடத்தில் கூட நீங்கள் நினைப்பது போல அரசியல் இருக்காது. ஆனால் படம் பார்ப்பவர்களை அரசியல் பேசவைக்கும். மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தான் படத்தை எடுத்திருக்கிறேன். இந்த கதைக்காக கிருஷ்ணய்யர் எழுதிய புத்தகங்கள் முதல் சந்துரு ஐயா அவர்களின் ஆலோசனை வரை பெற்றிருக்கிறேன். அரசியல் துளியும் இல்லாத, ஆனால் பார்ப்பவர்களை அரசியல் பேச வைக்கும் படம் இது. நான் கையில் எடுத்திருப்பது மனித நேயத்தை மட்டும்தான்.


இது சட்டத்துக்கோ, நீதி மன்றத்துக்கோ, அரசியல் வர்க்கத்துக்கோ எதிரான படம் அல்ல. மகனுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக போராடும் ஒரு தாயின் கதை மட்டுமே. நான் பேசுவது மனிதம் மட்டுமே... மனிததுக்குள் எல்லா அரசியலும் அடங்கியிருக்கிறது. இந்த படத்தின் கதையை ஒரே இரவில் எழுதி முடித்தேன். அப்போது படத்துக்கு இத்தனை பலம் சேரும் என தெரியாது. ஆனால் கதை பலமானது என்பதை நம்பினேன்.


கவுண்டமணி, பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, தியாகராஜன், ராம்கி, ஊர்வசி, மனோஜ், பிரித்வி என இன்னும் இன்னும் பலம் சேர்ந்தது கடவுளின் அனுகிரகம்தான். ஒரு நல்ல விஷயத்துக்கு பாதி அடியை நாம் எடுத்து வைத்தால் போதும்.நம்மை கடவுளே அதனை நோக்கி நகர்த்துவார் என்பது உண்மை ஆகியிருக்கிறது."


English summary
Interview of A Senthil Kumar, director of Vaaimai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil