ரெண்டு டேக் தான் எடுத்தாங்க.. வானம் கொட்டட்டும் ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த இயக்குநர் தனா!
Recommended Video
சென்னை: மணிரத்னம் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகி உள்ள வானம் கொட்டட்டும் திரைப்படம் தியேட்டர்களில் வெற்றி முரசு கொட்டி வருகிறது.
விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா சபாஸ்டியன், சாந்தனு, சரத்குமார், ராதிகா, அமிதாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வந்தது.

படைவீரன் படத்தை இயக்கிய இயக்குநர் தனா தனது 2வது படமாக வானம் கொட்டட்டும் படத்தை இயக்கி உள்ளார்.
சிறந்த நடிகர்கள் இந்த படத்தில் இருப்பதால், படம் சுவாரஸ்யமாகவும், சொல்ல வந்த விஷயத்தை யதார்த்தமாகவும் சொல்லி செல்கிறது.
கோபத்தால் சரத்குமார் செய்யும் ஒரு கொலை அவரை பதினாறு வருடங்கள் தனது குடும்பத்தை விட்டு பிரித்து சிறையில் அடைக்கிறது.

தந்தை இன்றி குழந்தைகளை வளர்க்கும் தாயாக ராதிகா தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்தை இயக்கிய இயக்குநர் தனா எனும் தனசேகரன் பிலிமி பீட்டுக்கு அளித்த நேர்காணல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தனது தாயாக நடித்த ராதிகா சரத்குமாரை தூக்கி சுற்றும் காட்சியை ஹீரோ விக்ரம் பிரபு ரெண்டே டேக்கில் நடித்து முடித்தார் என்றும், இந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் மணிரத்னம் தன் மீது வைத்த அளவு கடந்த நம்பிக்கை மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற சுவாரஸ்ய விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வரும் வானம் கொட்டட்டும் பட இயக்குநரின் நேர்காணலை கண்டு மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications











