நடிகர் ஸ்ரீகாந்த் வாழ்க்கையை நான் கெடுக்கல.. நான் சித்தப்பாவா? என்ன கொடுமைடா இது? அந்தணன் பேட்டி!

சென்னை: நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கின்றனர். தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து பலரும் பேசி வந்த நிலையில், ஸ்ரீகாந்தின் இந்த நிலைமைக்கு அவரின் சித்தப்பா தான் காரணம் என்று பலருன் அந்தணனை திட்டி வந்தனர். இது இணையத்தில் சர்ச்சையானதால், அந்தணன் விளக்கம் அளித்துள்ளார்.'

கொக்கைன் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த பிரதீப்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி, ஜான் என்பவரை தனிப்படை போலீசார் ஓசூரில் செய்து கைது செய்து விசாரித்தனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பிரசாந்தை கைது செய்து அவரின் போனை ஆய்வு செய்த போது, நடிகர் ஸ்ரீகாந்துடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ஸ்ரீகாந்த் பிரசாந்திடம் இருந்து போதை பொருளை வாங்கிய பயன்படுத்திய தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்து, ரத்த பரிசோதனை செய்தனர்.

Srikanth Anthanan
Photo Credit:

நடிகர் ஸ்ரீகாந்த்: இதில் ஸ்ரீகாந்த், போதை பொருளை பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அதே நடிகர் ஶ்ரீகிருஷ்ணா கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருளை பயன்படுத்தியது பேசுபொருளான நிலையில், பலரும் இதுகுறித்து பேசி இருந்தனர். அப்போது, ஸ்ரீகாந்தின் இந்த நிலைமைக்கு காரணம் அவரின் சித்தப்பாவான அந்தணன் தான் என்றும், அவர் தான் ஸ்ரீகாந்தின் வளர்ச்சியை தடுத்தார் என்று செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து, தெளிவான விளக்கத்தை வலைப்பேச்சு அந்தணன் அளித்துள்ளார்.

நான் சித்தப்பா இல்லை: நடிகர் ஸ்ரீகாந்த் பிராமணர் என்பது அனைவருக்கும் தெரியும், நான் பிராமணர் இல்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது நான் எப்படி நடிகர் ஸ்ரீகாந்துக்கு சித்தப்பா ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை. ஸ்ரீகாந்த் பேட்டிகளில் பேசும்போது தனது சித்தப்பாவான சுந்தர் என்று அவர் பெயரை குறிப்பிட்டு இருக்கலாம். அவர், பெயரை சொல்லாமல் விட்டுவிட்டார். சித்தப்பா தான் மேனேஜர். அவர் என்னுடைய நிறைய படங்களுக்கு கதைகளை கேட்டார் என்று அடுத்தடுத்து சொல்லிவிட்டார். நான் பத்திரிக்கை தொடர்புகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அது தவிர பல கதைகளை நடிகர் ஸ்ரீகாந்திற்காக கேட்டிருக்கிறேன்.

கெடுதல் செய்தது இல்லை: நான் எந்த இயக்குனரையும் தரக்குறைவாக நினைத்தது கிடையாது அப்படி அவர்களை நடத்தியதும் கிடையாது. நான் அவரோடு இருக்கும்போது அவருக்கு நல்லது தான் செய்திருக்கிறேன். ஒருமுறை கூட அவருக்கு கெடுதல் செய்ததே கிடையாது அது அவருக்கே நன்றாக தெரியும். கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று ஸ்ரீகாந்த் கூறினார். அந்த கதையை சரியாக கேட்டு அவர் தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால், ஸ்ரீகாந்த் அப்படி செய்யவில்லை. நான், அந்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற போது கூட, சார் இந்த கதை நல்லா இல்லை, டைரக்டரை மாற்றிவிடலாம் என்று கூட சொன்னேன். ஆனால், ஸ்ரீகாந்த் கதை ஓரளவுக்கு நன்றாகத்தான் இருக்கிறது என்று இயக்குனர் மீது இருந்த அன்பின் காரணமாக அவரை மாற்ற வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

எந்த இடத்திலும் ஸ்ரீகாந்தை நான் குறை சொல்லவே இல்லை வேண்டுமானால் அந்த பேட்டியை நீங்கள் திரும்ப ஒருமுறை கேட்டு பாருங்கள். மணிரத்தினத்திடம் வாங்கிய அட்வான்ஸை ஸ்ரீகாந்துக்கு தெரியாமலே, அவரது சித்தப்பா திருப்பி கொடுத்துவிட்டார். பல படங்களில் அவரது சித்தப்பாவின் தலையீடு இருந்தது. அது அவங்க இரண்டு பேருக்கும் இடையே பிரச்சனையை உண்டாக்கியது அந்த விஷயத்திற்குள் நாம் போக வேண்டாம் என்று அந்தணன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X