Nayanthara: நயன்தாராவை நாங்கள் தவிர்த்தோம்.. அவங்களாகதான் வந்து பேசினாங்க.. அந்தணன் ஓபன்!
சென்னை: சில தினங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவர்களின் குழந்தைகள் என குடும்பமாக வலைபேச்சு அந்தணன், பிஸ்மி மற்றும் சக்திவேல் என மூவரையும் சந்தித்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்தாலும், ஒருவழியாக இவர்களுக்கு இடையிலான பிரச்னை தீர்ந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டார்கள்.
இப்படி இருக்கையில் நயன்தாரா சந்திப்பது எங்கள் திட்டமே கிடையாது. நாங்கள் அவரை தவிர்க்கத்தான் செய்தோம். ஆனால் அவர்களாகவே எங்களிடத்தில் வந்து பேசினார்கள் என்று வலைபேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நடிகை நயன்தாரா அளித்த பேட்டியில், வலைபேச்சு அந்தணன், பிஸ்மி மற்றும் சக்திவேல் என மூவரின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்களை மூன்று குரங்குகள் என்று காட்டமாக விமர்சித்தார். நயன்தாராவின் இந்த விமர்சனத்திற்கு தங்களது வலைப்பேச்சு யூடியூப் சேனல் தொடங்கி பல யூடியூப் சேனல்களில் பேட்டிகளாகவும் பதிலடிகளாகவும் கொடுத்து வந்தனர்.

தவிர்த்தோம்: இப்படி இருக்கையில்; இவர்கள் சந்தித்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இடையில் பிரச்னை முடிந்து விட்டது போல என்று எண்ணினார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த சந்திப்பு தொடர்பாக அந்தணன் மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, நாங்கள் துபாயில் ஒரு பெரிய ஆளுமையைச் சந்திக்கச் சென்றோம். அப்போது அவர் இருங்களேன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருகிறார்கள் என்று கூறினார்கள். நாங்கள் மறுத்துவிட்டு வெளியேறிவிட்டோம். எதிர்பாராத நேரத்தில் எங்களை அவர் பார்த்தால் அவர்களுக்கு சங்கடம் ஏற்பட்டுவிடுமோ என்றுதான் நாங்கள் அந்த முடிவை எடுத்தோம்.
நயன்தாராவை கண்டுகொள்ளவில்லை: அதன் பின்னர் துபாய் விமான நிலையத்தில் எங்களைச் சந்தித்ததும் விக்னேஷ் சிவன் வந்து கட்டி அணைத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர்களின் குழந்தைகளின் சேட்டைகளைத்தான் நாங்கள் கவனித்துக் கொண்டு இருந்தோம். நயன்தாராவை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் குழந்தைகளின் சுட்டித்தனம், அவர்கள் தமிழ் பேசுவது, ஒரு குழந்தை விக்னேஷ் சிவனை போட்டு பாடாய் படுத்திக் கொண்டு இருந்ததை எல்லாம் ரசித்துக் கொண்டு இருந்தோம்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications