Jana Nayagan: ஜன நாயகன் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகாது.. விஜயை சிறைக்கு அனுப்ப திட்டமா? பிஸ்மி என்னங்க இப்படி சொல்றாரு
சென்னை: நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாக தயாராக உள்ள படம் ஜன நாயகன். இந்த படத்திற்கு இன்னும் தணிக்கை சான்று கிடைக்காததால் அது தொடர்பான பிரச்னை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் பத்திரிகையாளர் பிஸ்மி அளித்த பேட்டி ஒன்றில் கரூர் விவகாரம் மற்றும் ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் என இரண்டு தரப்பில் அவருக்கு நெருக்கடி கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அவர் பேசுகையில், கரூர் விவகாரத்தில் தவெக முன்னிலை தலைவர்களை அழைத்து விசாரணை நடத்தியது, சிபிஐ. அதன் பின்னர், விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அனைவரையும் ஒன்றாக அழைக்காமல், தனியாக அழைக்க காரணமே பாஜக கூட்டணியில் விஜய்யை கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான்.

விஜயை சிறைக்கு: கரூர் விவகாரத்தை வைத்து ஒரு பக்கம், ஜன நாயகன் படத்தின் தணிக்கை சான்றுக்காக கொடுக்கப்படும் நெருக்கடியும் அதற்காகத்தான். சென்சார் தரப்பில் ஜனநாயகனுக்கு எந்த கட்-உம் கிடையாது, எந்த மியூட்டும் கிடையாது. தேசிய விருது வாங்கிய பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன். படத்தில் சொல்லப்பட்ட சிறிய மாற்றத்தையும் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியே படக்குழு செய்துவிட்டது. அன்றைய தேதியே படத்தின் சான்றிதழைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்படவில்லை.
9ஆம் தேதி ரிலீஸ் ஆகாது: எனக்குத் தெரிந்து இந்த படம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகாது. 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும், அல்லது சில வாரங்கள் தள்ளிப்போகும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, தனது கட்டுப்பாட்டில் உள்ள பலவற்றையும் வைத்து விஜயை மிரட்டப் பார்க்கிறார்கள். கரூர் வழக்கில் விஜயை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது நடக்காது. விஜயை சிறைக்கு அனுப்பி விட்டால் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசியல் கூட்டுச் சதி: நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தை வரும் 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு அறிவித்து, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னணி நிர்வாகியாக உள்ள ராஜ்மோகன் அண்மையில் அளித்த பேட்டியில், ஜன நாயகன் படத்திற்கு சென்சார் கிடைப்பதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்தினார். இதில், பாஜக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் இணைந்து சதி செய்வதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











