யாரும் பேசாததையா பார்திபன் பேசிவிட்டார்.. திரிஷாவின் பதில் ரொம்ப தப்பு.. அந்தணன்!
சென்னை: நடிகரும், இயக்குநருமான பார்திபன், திரிஷா குறித்து பேசியதை, திரிஷா கடுமையாக கண்டித்து இருந்தார். இதுகுறித்து பேசி இருக்கும் வலைப்பேச்சு அந்தணன், யாரும் பேசாததையா பார்திபன் பேசிவிட்டார் என கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு குறித்த தகவல்கள் கடந்த பிப்ரவரி 27ந் தேதி வெளியானது. சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இது தொடர்பான வழக்கு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடிக்க, கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து, தயாரிப்பாளர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

பார்திபன் பேச்சு: இதனைத் தொடர்ந்து, குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், குந்தவை இப்போது வீட்டுக்குள் குந்தவைக்கப்பட்டால் நல்லது, நிறைய பிரச்சினைகள் உண்டாகாமல் இருக்கும் என்று பேசி இருந்தார். இதை வன்மையாக கண்டித்த நடிகை திரிஷா, 'மைக் முன்பு ஒரு கருத்தை கூறுவதால் அது புத்திசாலித்தனமாகவோ நகைச்சுவையாகவோ மாறிவிடாது. அந்த அறிவு இல்லாத வார்த்தைகள், பேசுபவரின் நிலைப்பாட்டையே காட்டும் அறிவற்ற கருத்து. இந்த கருத்து முட்டாள்தனமானது' என்று பேசி இருந்தார்.
தவேகவின் நிலைப்பாடு மாறிவிட்டது: இதுகுறித்து, அந்தணன் யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில், ஏஜிஎஸ் திருமண நிகழ்ச்சிக்கு திரிஷா, விஜய் இருவரும் ஒன்றாக வந்ததற்கு பிறகு தவேகவின் அரசியல் நிலைப்பாடு வேறு விதமாக மாறி உள்ளது. அதே கட்சியில் இருக்கும் பெண்களே இப்போது விஜய்க்கு எதிராக குரலை கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் எப்படி பேசலாம் என திரிஷா பயங்கரமாக பொங்க ஆரம்பித்து விட்டார். இப்படித்தான் பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசியபோது பலரும் பொங்கினார்கள். ஆனால், பதினைந்து நாள் கழித்து நிலைமையை மாறிவிட்டது.
சரியில்லை: திரிஷா தற்போது பார்திபன் குறித்து பேசியது கொஞ்சமும் சரியில்லை. விஜய், திரிஷா இருவரும் ஒன்றாக திருமணத்திற்கு சென்றதை பலரும் விமர்சித்து இருக்கும் நிலையில் பார்த்திபன் பேசியது மட்டும் எப்படி தவறாகும். எது எப்படி இருந்தாலும், பார்திபன் பெரிய மனிதன். இந்த விஷயத்தை அவர் பெரிதாக்க விரும்பாததால், தவறு நடந்துவிட்டது என வருத்தம் தெரிவித்துவிட்டார் என அந்த வீடியோவில் அந்தணன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











