விஜய்-அஜித் இடையே மிகப்போட்டி இருக்கு..இணைய கூலிப்படையே வேலை செய்கிறது.. சர்ச்சையை கிளப்பிய பிஸ்மி!
சென்னை : விஜய், அஜித் இடையே மிகப்பெரிய போட்டி இருக்கு, ஆனால் வெளி உலகத்திற்கு நண்பர்கள் போல இருக்கிறார்கள் என்று சர்ச்சையை கிளப்பி உள்ளார் பிஸ்மி.
சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி, பீலிமிபீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாகிவிட்டதால், அஜித்தின் 62 திரைப்படத்தின் அறிவிப்பும் டைட்டில் ப்ரோமோவுடன் தான் வெளியாக வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றார்.
அஜித்62 திரைப்படத்திற்கு மூன்று தலைப்புகளை தேர்வு செய்து தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்கள். தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்தவுடன் தலைப்போடு படம் குறித்த அறிவிப்பை வெளியிட காத்து இருக்கிறார்கள்.

மிகப்பெரிய போட்டி
மேலும், அஜித்திற்கும் விஜய்க்கும் இடையே மிகப்பெரிய போட்டி இருக்கும், விஜய்யை மிஞ்ச வேண்டும் என்று அஜித்தும், அஜித்தை மிஞ்ச வேண்டும் என்று விஜய்யும் பிளான் போட்டு வேலை செய்து வருகிறார்கள். ஆனால், வெளியில் பார்க்கும் போது இருவரும் நண்பர்கள் போல பிரியாணி பறிமாறிக் கொள்வார்கள். ஆனால், இரண்டு பேருக்கு இடையேயும் பெரிய போட்டி நடக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

பிளான் போட்டு செய்கிறார்கள்
விஜய் பற்றி ஒரு அப்டேட் வருகிறது என்றால், அதை திசை திருப்ப, அஜித் பற்றிய ஒரு செய்தி வெளியாகி இந்த பரபரப்பை ஒன்றும் இல்லாமல் செய்துவிடும். அதேபோல அஜித் பற்றி ஒரு தகவல் பரவினால், விஜய் அதை ஒன்னுமில்லாமல் ஆக்கிவிடுவார். இவை அனைத்தும் தற்செயலாக நடக்கவில்லை. இருவரும் பக்கவாக பிளான் போட்டுத்தான் செய்கிறார்கள்.

இணைய கூலிப்படை வேலை செய்கிறது
அஜித், விஜய் இரண்டு பேருக்குமே 'ஐடிவி' என்ற இணைய கூலிப்படை வேலை செய்கிறது. அதற்காக இவர்கள் இருவருமே மாத மாதம் சம்பளம் கொடுத்து வருகிறார்கள். இந்த தகவல் அனுமானம் கிடையாது, நிச்சயமாக நம்பத்தகுந்தவர்கள் கொடுத்த தகவல் தான் என்றார் பிஸ்மி.

போட்டா போட்டி
மேலும்,வாரிசு, துணிவு படத்திற்கு கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பை அறிவித்தார்கள். ஆனால், விஜய் படத்தின் அறிவிப்பு தலைப்போடு வெளியானதால், அஜித்62 படத்தையும் டைட்டிலோடு வெளியிட காத்திருக்கிறார்கள். மக்கள் இதை தற்செயலாக நடக்கிறது என்று நினைக்க வேண்டாம், நீங்கள் கொண்டாடுகிற நடிகர்களின் மனதில் இப்படி போட்டி மனப்பான்மை இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விரைவில் படப்பிடிப்பு
AK62 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ந்தேதி தொடங்குவதாக இருந்தது, ஆனால், விக்னேஷ் சிவன் செய்த பிரச்சனையால் கிட்டத்தட்ட இரண்டு மாதம் படப்பிடிப்பு தள்ளிபோய் உள்ளது. ஒரு வேலை படத்தை தீபாவளிக்கு வெளியிட முடியவில்லை என்றால், பொங்கலுக்கு படம் ரிலீஸாக வாய்ப்பு இருக்கு. எது எப்படி இருந்தாலும், மார்ச் இரண்டாவது வாரத்தில் நிச்சயம் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











