தனுஷூக்கு எதிராக வேலை செய்யும் இணைய கூலி படை.. இளையராஜா புத்தி தனுஷுக்கு இல்லை.. பிஸ்மி பேட்டி!

சென்னை: இளையராஜா தான் இசையமைத்த பாடலை அனுமதி இன்றி எந்த படத்தில் பயன்படுத்தினாலும் அதற்கு ராயல்டி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் அஜீத் நடித்த படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். அதைத்தொடர்ந்து வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் 'சிவராத்திரி தூக்கம் எது' என்ற பாடலை பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்தில் அவசர அவசரமாக வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து பேசிய வனிதா விஜயகுமார், நான் இளையராஜா அவர்களின் வீட்டுக்கு சென்று ஆசீர் பெற்றேன். அவரிடம் அனுமதி வாங்கித் தான் பாடலை பயன்படுத்தினேன். ஏனென்றால், அவர் ஒரு பேட்டியில் எனக்கு மரியாதை கொடுத்து அனுமதி வாங்கி விட்டால். நான் பணம் கேட்க மாட்டேன் என கூறியிருந்தார். அதனால் நான் அனுமதி வாங்கி அந்த பாடலை பயன்படுத்தி இருந்தேன். ஆனால், இப்போது வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறியிருந்தார். இளையராஜா போல தனுஷ் அவர்களும் என்ஓசி கேட்டு தொல்லை கொடுப்பதாக பரவலாக செய்தி பரவி வருகிறது. இது குறித்து, Valaipechu Voice youtube சேனலில் பிஸ்மி பேசினார்.

Dhanush ilaiyaraja royalty
Photo Credit:

எதிராக கூலிப்படை: அதில், தனுசுக்கு எதிராக இணைய கூலிப்படை ஒன்று வேலை செய்து வருகிறது. முக்கியமாக சிவகார்த்திகேயனுடைய இணைய கூலிப்படை வேலை செய்து வருகிறார்கள். மற்றொரு பக்கம், சிம்புவின் ரசிகர்கள் தனுஷின் மீது பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள். என்ன காரணம் என்றால், சிம்புவிற்கு தனுசை பிடிக்காது என்பதால், ரசிகர்களும் அதே மனப்பான்மையில் அவர் மீது கோபத்தில் இருக்கிறார். நயன்தாராவின் ரசிகர்களும் தனுஷ் மேல் இணையத்தில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அப்பட்டமான பொய்: குறிப்பாக, வெற்றிமாறனிடம் என்ஓசிக்கு அவர் பணம் கேட்டார் என்பதெல்லாம் அப்பட்டமான பொய், வெற்றிமாறன் மீது தனுஷ் மிகப்பெரிய பாசம், மரியாதை வைத்து இருக்கிறார். அவர் சொன்னது என்னவென்றால், எந்தெந்த இடத்தில் கையெழுத்து போட வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் நான் கையெழுத்து போட்டு தருகிறேன் என்று தான் சொன்னார். ஆனால், என்ஓசிக்கு பணம் கேட்டார் என்று தவறான செய்தி பரப்புவதன் நோக்கமே தனுஷின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் தான்.

அவசியம் இல்லை: அவரின் வளர்ச்சியை யாராலுமே தடுக்க முடியாததால் தவறான ஒரு பெயரை பரப்பி தனுஷின் வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள். அதேபோல விஜே சித்து நடித்து வரும் திரைப்படத்திற்கும் தனுஷ் என்.ஓ.சி கொடுத்து இருக்கிறார். ஏனென்றால் விஜே சித்து நடித்து வரும் திரைப்படத்தை வேல் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த தயாரிப்பு நிறுவனத்தில் தனுஷ் மூன்று படத்தில் நடித்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது, அவரிடம் தனுஷ் எப்படி பணம் கேட்பார். ராயல்டி மூலம் வரும் காசை வாங்கித்தான் சோறு சாப்பிட வேண்டிய அவசியம் தனுஷூக்கு இல்லை. இளையராஜா மாதிரி நோட்டீஸ் விட்டு யாரு கிட்ட எவ்வளவு பில்லு போடலாம் என்ற எண்ணம் தனுஷிடம் கிடையாது. தனிப்பட்ட வாழ்க்கையில் தனுஷ் எப்படியோ ஆனால் திரையுலகை பொருத்தவரையில் அவர் பலருக்கும் உதவக் கூடியவர் என பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X