ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலம்.. சிக்கும் விஐபி நடிகர்கள்..பிஸ்மி பேட்டி!
சென்னை: 'ரோஜா கூட்டம்' படத்தின் மூலமாக ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, இவர்
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார். நடிகர் ஸ்ரீகாந்த் கைது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி The Final Cut என்கிற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், சினிமாவில் போதை கலாச்சாரம் என்பது நீண்ட காலமாகவே உள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவை விட மலையாள சினிமாவிலும், மலையாளத்தை விட தெலுங்கிலும், தெலுங்கைவிட பாலிவுட்டிலும் போதை கலாச்சாரம் அதிகமாக உள்ளது. இது மறுக்க முடியாத உண்மை. இதை யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று வெளிப்படையாக பெயரைச் சொல்ல முடியாது என்றாலும், நாம் திரையில் பார்த்து வியந்து போன பல பேர், இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மலையாள சினிமாவில் பல இளைய தலைமுறைகள் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். முன்பெல்லாம், நடிகர்கள் வைக்கும் பார்ட்டிகளில் மது தான் இருக்கும். ஆனால், இப்போது போதை வஸ்தான கோக்கைன் பயன்படுத்தப்படுகிறது என்பது செவி வழியாக நமக்கு வந்த தகவல்.

விஐபி நடிகர்கள் சிக்குவார்கள்: அடிதடி வழக்கில் சிக்கிய அதிமுகவைச் சேர்ந்த பிரசாத்தை கைது செய்த பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனர். இது அரசியல் ரீதியாக வழக்காக இருப்பதால் தான் தற்போது இது அம்பலத்திற்கு வந்துள்ளது. இல்லையென்றால் இந்த விஷயமே வெளியில் வந்து இருக்காது என்பது என்னுடைய கருத்து. இதில், நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது அவர் மட்டும் இல்லாமல் இன்னும் பல விஐபி நடிகர்கள், நடிகைகளும் இந்த வழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் நேர்மையாக விசாரணை நடத்தினால், பல நடிகர், நடிகைகள் சிக்குவார்கள். இது அரசியல் ரீதியாக பிரசாத்தை சிக்க வைக்கும் வழக்காக இருக்கும் பட்சத்தில் கைது நடவடிக்கை இத்துடனே நின்று விடும்.
மென்மையான நடிகர்: சினிமாவில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் மன உளைச்சலில் இருப்பதால் இது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதாக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, யாருக்குத்தான் பிரச்சனை இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக அதிலிருந்து நான் விடுபடுவதற்காக இப்படி செய்தேன் என்று சொல்லிவிட முடியாது. ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று செய்தி வந்தபோது நான் நம்பவே இல்லை. ஏனென்றால், ஸ்ரீகாந்த் என்பவர் உண்மையிலேயே ஒரு மென்மையான நபர். ஆனால், அதன் பிறகு அவரே பயன்படுத்தினேன் என்று அவர் கொடுத்த வாக்குமூலத்தை பார்க்கும் பொழுது தான், அவருக்கு பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பக்கம் குடும்பத்தில் பிரச்சனை, மறுபக்கம் பட வாய்ப்பு இல்லை போன்ற அழுத்தங்களால் அவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார். எது எப்படியாக இருந்தாலும் மன அழுத்தத்திற்கு இது தீர்வு அல்ல என்று பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











