வலியை தாங்கும் வலிமையானவர் அஜித்… இயக்குனர் எச்.வினோத் பேட்டி!
சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ, தீம் மியூசிக் வெளியான நிலையில் இத்திரைப்படம் குறித்த பல சுவாரசியமான தகவலை இயக்குனர் வினோத் பேட்டியில் கூறியுள்ளார்.

பல முன்னணி நடிகர்கள்
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு ரிலீஸ்
இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் வலிமை பட இயக்குனர் எச்.வினோத். வலிமை வெறும் மோட்டார் சைக்கிள் பற்றிய படம் மட்டும் இல்லை, ஆக்ஷன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் என்றார்.

வலியை தாங்கிக் கொள்கிறார்
மேலும், அஜித் சாருக்கு வலியைத் தாங்கும் சக்தி அதிகம். நமக்கு ஒரு சிறிய அடிபட்டால் கூட நாலு பேருக்கு காட்டுவோம். ஆனால், அஜித் சார் அப்படி கிடையாது. அவருக்கு வலியைத் தாங்கும் சக்தி அதிகமாகவே உள்ளது. விபத்து ஏற்பட்ட அந்தப் பைக் காட்சிகளை நாங்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்து படமாக்கினோம். அப்போது, தயாரிப்பாளரும் ஷூட்டிங்கில் இருந்தார். எதிர்பாராவிதமாக பைக்கிலிருந்து விழுந்து அஜித் சாருக்கு அடிப்பட்டதும் நாளைக்கு ஷூட்டிங் வேண்டாம். ரெண்டு மூன்று நாள் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார் தயாரிப்பாளர்.

வலியை பொருப்படுத்தவில்லை
ஆனால், அஜித் வேண்டாம் என்று கூறிவிட்டு, அந்தக் காயத்துடனேயே மறுநாள் இரவு ஷூட்டிங்கில் வந்து நின்று விட்டார், பைக் சேஸிங் சீன் என்பதால் மூன்று லேயர் உடைகளை அணியவேண்டும். அடிப்பட்டு சதையெல்லாம் பிய்ந்துபோன புண்ணுக்கு நடுவில் அணிவது எவ்வளவு ரிஸ்க்? ஆனால், வலியை பொருப்படுத்தாமல் அந்த உடையை போட்டுக்கொண்டு வந்து நின்றதை பார்க்கும்போது அச்சரியமாக இருந்தது என்றார்.


Click it and Unblock the Notifications











