அஜித் சார் இதை சொல்லும்போது வெக்கமா வரும்... அஜித் வில்லன் சொல்றத பாருங்க!

சென்னை : நடிகர் அஜித், ஹுமா குரேஷி லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் வலிமை.

Recommended Video

Ajith Sir இதை சொல்லும்போது வெக்கமா வரும் !Valimai Villain First Exclusive Tamil Interview

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

படத்தில் நடிகர் கார்த்திகேயா வில்லனாக மிரட்டியுள்ளார். அவரது வீடியோக்கள், போஸ்டர்கள் மிரட்டலாக காணப்படுகிறது.

வலிமை படம்

வலிமை படம்

நடிகர் அஜித், ஹுமா குரேஷி லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் வலிமை. இந்தப் படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளன. தொடர்ந்து வலிமையின் அப்டேட்கள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

அடுத்தடுத்த அப்டேட்கள்

அடுத்தடுத்த அப்டேட்கள்

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போன நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது வலிமை. இதுகுறித்து தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

வில்லன் கார்த்திகேயா

வில்லன் கார்த்திகேயா

இந்நிலையில் படத்தில் வில்லனாக மிரட்டியுள்ள நடிகர் கார்த்திகேயா, படம் குறித்த பல்வேறு தகவல்களை பிலிமிபீட் நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார். வலிமை படத்தில் நடித்துள்ளது பெருமையாக உள்ள அதே நேரத்தில் அதிகப்படியான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தன்னுடைய கேரக்டரை மேலும் சிறப்பாக வேண்டியதன் பொறுப்பை அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் கொடுத்த தம்பள்ஸ்

அஜித் கொடுத்த தம்பள்ஸ்

தொடர்ந்து பேசிய அவர், அஜித் தனக்கு கொடுத்த உடற்பயிற்சி கருவி தனக்கு எதிர்பார்க்காமல் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். தான் அதை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் தன்னுடனேயே அந்த தம்பள்ஸ் எப்போதும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஜித் தன்னை ஹீரோகாரு என்று கூப்பிடும்போது தனக்கு மிகவும் வெட்கமாக வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பைக்கை செக் செய்யும் அஜித்

பைக்கை செக் செய்யும் அஜித்

தனக்கும் பைக்கிற்கும் தொடர்ந்து தொடர்பு இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ள கார்த்திகேயா, தனக்கு பைக் கொடுப்பதற்கு முன்னதாக அதை செக் செய்துவிட்டே அஜித் கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பைக் மற்றும் அதன் தொழில்நுட்பத்தில் அஜித் பி.எச்டி முடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்புலம் இல்லாமல் சாதனை

பின்புலம் இல்லாமல் சாதனை

எந்த பின்புலமும் இல்லாமல் அஜித் போலவே சினிமா துறையில் மிகுந்த போராட்டத்திற்கு பின்பு பிரபலமானவர். இந்நிலையில் அஜித்தின் இந்த விஷயம் தனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயமே அஜித்தை தன்னுடன் மிகுந்த நெருக்கமாக பழக வைத்ததாக மற்றும் அஜித்தின் ஆரம்ப காலத்தை நியாபகப்படுத்தியதாக அஜித் கூறியதாகவும் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

அஜித்திற்கு அஜித்தே வில்லன்

அஜித்திற்கு அஜித்தே வில்லன்

அஜித்திற்கு டஃப் கொடுத்த வில்லனாக தான் அஜித்தையே கருதுவதாகவும் கார்த்திகேயா தெரிவித்துள்ளார். வரலாறு, மங்காத்தா, குஷி படங்களில் அவரது வில்லத்தனம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வில்லனாக சிறப்பாக நடித்த அஜித்திற்கு வில்லனாக நடிப்பது மிகுந்த கடினமாக விஷயமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக டாட்டூஸ், லென்ஸ் போன்ற பாடி லாங்குவேஜை தான் படத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

3 மணிநேரம் பிடித்த டாட்டூஸ்

3 மணிநேரம் பிடித்த டாட்டூஸ்

படத்தில் தன்னுடைய உடலில் போடப்பட்டிருந்த டாட்டூஸ்களை போடுவதற்கு தினந்தோறும் மூன்று மணிநேரங்களை தான் செலவிட்டதாகவும், காலை 6 மணிக்கு சூட்டிங் என்றால் தான் 2 முதல் 3 மணியிலிருந்தே டாட்டூஸ் போட உட்கார வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆரம்பத்தில் தன்னுடைய கண்ணில் போட்ட லென்சை சமாளிக்க முடியாமல் திணறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டயலாக்குகளுக்கு முக்கியத்துவம்

கேம் தற்போது ட்ரெயிலரில்தான் உள்ளது என்ற டயலாக் படத்தில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று தெரிவித்துள்ள கார்த்திகேயா, எச் வினோத்தின் படங்களில் டயலாக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையிலான டயலாக்குகள் பேசப்படும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X