இயக்குனர் எச்.வினோத் என்னை கோபப்படுத்தினார்... கார்த்திகேயா சொன்ன காரணம் இது தான்

சென்னை: இயக்குனர் எச்.வினோத் ஒரு கட்டத்தில் என்னை கோபப்படுத்தி விட்டார் என்று வலிமை படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயா கூறினார்.

நடிகர் அஜித், ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்து பிப்ரவரி 24ம் தேதி வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது . இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் வில்லனாக மிரட்டியுள்ள நடிகர் கார்த்திகேயா படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பிலிமிபீட் நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த சிறப்பு பேட்டி.

சின்ன காயங்கள்

சின்ன காயங்கள்

கேள்வி: படப்பிடிப்பின் போது உங்களுக்கு விபத்து ஏற்பட்டதா?

பதில்: நடிகர் அஜித்துக்கு ஏற்பட்ட மாதிரி எனக்கு இல்லை. எனக்கு அடிபட்டதெல்லாம் சின்ன காயங்கள் தான். இது பெரிய விஷயமே கிடையாது. ஏனெனில் இதுவரை அஜித் சாருக்கு 20க்கும் மேற்பட்ட சர்ஜரி, அவரது உடம்பில் உள்ள மெட்டல் போன்றவற்றுடன் அவர் செய்யும் கடினமான உழைப்பிற்கு முன்பு இதெல்லாம் சாதாரணம்.

பயத்தை ஏற்படுத்த கூடாது

பயத்தை ஏற்படுத்த கூடாது

கேள்வி: படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் சாருடன் பைக்கில் ஒன்றாக சென்றுள்ளீர்களா?
பதில்: படப்பிடிப்பின் போது அஜித் சாருக்கு விபத்து ஏற்பட்டது. உடன் சிறிதளவு மனதளராமல் அவர் எழுந்து, கார்த்திகேயா உட்கார், போகலாம் என்று கூறினார். நான் பின்னால் அமர்ந்து பைக்கில் சென்றேன். கேரவன் சென்றவுடன் அஜித் அவரது சட்டையை கழற்றி, காயங்கள் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தார்.காயங்கள் இருந்த போதும் ...அப்போது அவர் கூறியது, விபத்து நடந்த பகுதியில் எந்த வித பயமும் நம்மால் ஏற்படக்கூடாது என்றார். அந்த அளவுக்கு டெடிகேஷன் .

என்னோட பிக் பிரதர்

என்னோட பிக் பிரதர்

கேள்வி: நடிகர் அஜித் குறித்து நீங்கள் கூற விரும்புவது

பதில்: நடிகர் அஜித்திடமிருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், நான் இன்னும் நன்றாக நடிக்க பயிற்சி எடுக்க வேண்டும். மேலும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு தோன்றியது. நடிகர் அஜித் தான் என்னோட பிக் பிரதர் என்றார்.

டேர்டு பைக் ரொம்ப கஷ்டம்

டேர்டு பைக் ரொம்ப கஷ்டம்

கேள்வி: நீங்கள் படத்தில் பயன்படுத்திய பைக் குறித்து..

பதில்: நான் படப்பிடிப்பில் பயன்படுத்தும் பைக்கை முன்பே நடிகர் அஜித் சரிபார்ப்பார். என்னோட பைக் அவர் பைக்கை விட பெரியது. (DIRT BIKE )டேர்டு எனப்படும் இந்த பைக் இந்தியாவில் கிடையாது. ரஷ்யா போன்ற வெளிநாடுகளில் உள்ளது. இந்த பைக் ஓட்டுவது ரொம்ப கஷ்டம். கேம் பைக் போன்று இருக்கும்.

அஜித், விஜய் இருவரும் தூண்கள்

அஜித், விஜய் இருவரும் தூண்கள்

கேள்வி: தமிழ் திரையுலகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்..

பதில்: தமிழ் திரையுலகத்தில் அஜித், விஜய் ஆகிய இரண்டு பேரும் தூண்கள். நடிகர் அஜித்துடன் நடித்து விட்டேன். நடிகர் விஜய் உடனும் நடித்தால் நன்றாக இருக்கும். நடிகர் ரஜினியை நான் எப்போது தமிழ் நடிகராக கருதியதில்லை. ஏனென்றால் நான் சிறுவயதிலிருந்து அவர் நடித்த பாட்ஷா, படையப்பா, எந்திரன் போன்ற படங்கள் தெலுங்கில் ரீலிசாகி வெற்றிபடமாக அமைந்துள்ளது. என் மனதளவில் ரஜினி தெலுங்கு நடிகர் என்று கருதி விட்டேன்.

பயங்கர கோபம்

பயங்கர கோபம்

கேள்வி: இயக்குனர் எச்.வினோத் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: இயக்குனர் எச்.வினோத் மீது பயங்கர கோபமாக உள்ளேன். ஏனென்றால் கடைசி நாட்கள் படப்பிடிப்பின் போது என்னிடம் ஒன்றை கூறினார். படம் ஆரம்பிக்கும்பொழுது நான் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு என்னை மாற்றி விட்டு, வேறொருவரை நியமிக்க எச். வினோத் நினைத்தாராம். இதற்கு பிரயசித்தமாக அவர் என்னுடன் 10 படங்களில் பணிபுரிய வேண்டும் என்றார்.

கேள்வி: வலிமை திரைப்படம் உங்கள் பார்வையில்...

பதில்: ஒரு நல்ல படத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி ஏற்பட்டுள்ளது. வானத்தில் பறக்கக்கூடிய கேரக்டர்களில் மட்டுமே நான் டூப் போட்டேன். மற்ற காட்சிகளில் எல்லாம் ஒரிஜினலாக நடித்தேன். மேலும் இந்த படத்தில் எனது கேர்ள் பிரண்டு கதாபாத்திரமும் நன்றாக நடித்துள்ளார். காதல், ரொமான்ஸ் குறைவாக இருக்கும் ஆனாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X