twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வனவாசம் சென்ற வனம் டீம் ...படம் உருவானதை பற்றி மனம் திறக்கும் படைப்பாளிகள்

    |

    சென்னை : வெற்றி நடைபோடும் வனம் திரைப்படம் அமானுஷ்யங்களும் த்ரில்லரும் ஸ்வாரஸ்யம் நிறைந்த படமாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    Recommended Video

    Vanam படத்துக்கு ஏன் Actor Vetri யை select பண்ணோம் ! | Srikandan & Alex Exlcusive | Filmibeat Tamil

    தியேட்டரை விட்டு வெளியே வரும் போதே பலபேருக்கு மறுபிறவி பற்றியும், இயற்கை பாதுகாப்பு பற்றியும் ஒரு தீப்பொறியை தூண்டியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது .

    வனம் த்ரில்லர் படம் மட்டுமல்ல... உண்மையை உரக்கச் சொல்லும் உணர்வுபூர்வமான படம்.. ரசிகர்கள் பாராட்டு!வனம் த்ரில்லர் படம் மட்டுமல்ல... உண்மையை உரக்கச் சொல்லும் உணர்வுபூர்வமான படம்.. ரசிகர்கள் பாராட்டு!

    இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன் மற்றும் தயாரிப்பாளர் அலெக்ஸ் இருவரும் வனம் வெற்றிப்பயணங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

    கதைய சொல்லும்போது

    கதைய சொல்லும்போது

    கேள்வி : முதல்ல கதைய யார் கிட்ட சொன்னீங்க?

    ஸ்ரீகண்டன் பதில் : நீண்டக்கால நண்பர் தயாரிப்பாளர் அலெக்ஸ். மறுபிறவி பத்தின ஒரு கதைன்னு ஒன்லைன் மட்டும் சொன்னேன். ஒரு ஐடியா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தேன். ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்குன்னு அலெக்ஸ் ஒரு நாள் வீட்டுக்கு கூப்பிட்டாரு. அம்மா, அப்பான்னு ஒரு பத்து பேர் கிட்ட குடும்பத்தோட கதைய சொன்னேன். எல்லாருக்குமே பிடிச்சது. அவங்க கிட்ட இருந்து வர்ற கருத்துக்களுமே பாசிட்டிவா இருந்துச்சு. வழக்கமா நிறைய தயாரிப்பாளர்களை சந்திச்சி, கதை சொல்ல ஆபீஸ் போயிருப்போம், அது எதுவுமே இங்க நடக்கல .ஆனா இது ரொம்பவே வித்யாசமா ஒரு அனுபவமா இருந்துச்சு.

    ஹீரோ ஹீரோயின் தேடல்

    ஹீரோ ஹீரோயின் தேடல்

    கேள்வி : இந்த ஹீரோ ஹீரோயின ஏன் செலக்ட் பண்ணீங்க

    ஸ்ரீகண்டன் பதில் : சிலபேர் கிட்ட கதை சொல்லி, இதுல ஹீரோவுக்கு அவ்வளவா முக்கியத்துவம் இல்லன்னு சொல்லிட்டாங்க. கதை ஸ்பாயில் ஆகிட கூடாதுன்னு கவனமா இருந்தோம். அப்பதான் வெற்றியோட ஜூவி படம் வந்துச்சு. அவரை தொடர்பு கொண்டு படத்துக்கு நடிக்க கேட்டோம். வெற்றி வந்ததுமே படம் வெற்றின்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு. பழங்குடியினர் கேரக்டருக்கு நிறைய மெனக்கட்டு தேடிட்டு இருந்தேன். அப்பதான் எதேச்சயா இன்ஸ்டாகிராம்ல அனு சித்தாராவ பார்த்துட்டு, அவங்க காண்டக்ட் வாங்கி, போன்லயே கதை, சீன் எல்லாம் விளக்கி சொன்னோம் , அந்த கேரக்டரும் படத்துல ரொம்ப நல்லா ஆப்ட்டா பண்ணிருந்தாங்க.

    நச்சுன்னு சொல்லிருக்கோம்

    நச்சுன்னு சொல்லிருக்கோம்

    கேள்வி : மறுபிறவி பத்தி எப்படி இவ்வளவு ஈசியா குடுக்க முடிஞ்சது?

    ஸ்ரீகண்டன் பதில் : கொச்சின்ல ஒரு மியூசியம் போனப்போ ஒரு கண்ணாடிய பார்த்தேன். அதுல வேற ஒரு முகம் தெரிஞ்சா எப்படி இருக்கும்ன்னு தோணுச்சு. அந்த கற்பனைதான் இந்த படம் உருவாக காரணம். அத ஒரு ஷாட்ல சொல்லப்பட்டுருக்கு இந்த படத்துல. அதுக்காக தெரப்பி குடுக்கிறது, ட்ரீட்மெண்ட் குடுத்து மறுபிறவிய புரியவக்கிறதுன்னுல்லாம் இல்லாம, இப்படி ஸ்மார்ட்டா சொன்னது எல்லாருக்கும் ரொம்பவே பிடிச்சி போச்சு.

    கடுமையான மழையிலும்

    கேள்வி : எவ்வளவு நாளாச்சு படம் முடிக்க?

    அலெக்ஸ் பதில் : ஷூட்டிங் 22 நாட்கள்ல முடிச்சிருக்கோம். அந்த கடின உழைப்பு படத்துல இருக்கும். படம் பாக்குறப்பவே கிராண்டா இருக்கும். ஆனா இவ்வளவு சீக்கிரம் எடுத்ததான்னு பலருக்கும் தெரியாது. நல்ல கண்டண்ட் குடுத்துருக்கோம்ங்கிற ஒரு திருப்தியும் இருக்கு. நல்ல பாசிடிவ் கமெண்ட் வந்துகிட்டு இருக்கிறது ரொம்ப சந்தோஷம்.என்று மனம் திறந்து பேசினார்கள். பல மனங்களை வென்ற இந்த திரைப்படம் திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.கடுமையான மழையிலும் மக்கள் இந்த படத்தை பார்க்க வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . அலெக்ஸ் மற்றும் இயக்குனர் ஸ்ரீகண்டன் பேசிய பிரேத்தியேக பேட்டி பில்மிபீட் தமிழ் யூட்யூபில் இன்னும் விரிவாக காணலாம் .

    English summary
    Vanam Movie Producer and Director Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X