தனுஷ் கூப்டாலும் போக மாட்டியா? மோசமா பேசிய மேனேஜர்.. கடுப்பான சீரியல் நடிகை!

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல என்ற தொடரில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை மான்யா ஆனந்த். அந்த தொடர் முடிந்த பிறகு கயல். அன்னம், மருமகள் சீரியல்களின் சங்கமத்தில் ஒரு ஸ்பெஷல் ரோலில் நடித்திருந்தார். அடுத்து அவர் என்ன சீரியல் நடிக்கப்போகிறார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், Cineulagam சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நான் நடிகையாவேன் என்று நினைக்கவே இல்லை, படித்து முடித்துவிட்டு நல்ல வேலைக்கு சென்று அழகான ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். ஆனால், தோழி ஒருவர் தான் எனக்கு என்னை ஆடிஷனுக்கு அழைத்து சென்றார். அந்த ஆடிஷனில் செலக்ட் ஆகி நடிகையாகி விட்டேன். நடிகையாக நான் மாறினாலும், எனக்கு என்று சில வரைமுறைகளை நான் வைத்து இருக்கிறேன். அதனுடன் தான் நடித்து வருகிறேன். கிளாமராக நடிக்க மாட்டேன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சில வரைமுறைகளை நான் வைத்து இருக்கிறேன் என்றார்.

maanya anand vanathai pola serial
Photo Credit:

சீரியல் நடிகை மான்யா: கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் தனுஷின் மேனேஜர் நான், தனுஷ் சார் புதிதாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தில் நடிப்பீங்களா என்று கேட்டார். நானும், சினிமாவில் நடிப்பதற்கு தயார்தான். ஆனால், ஓவர் கவர்ச்சி காட்ட மாட்டேன் என கூறிவிட்டேன். அதை தொடர்ந்து அவர், அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினார் நான் அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் செய்ய மாட்டேன். அதில், எனக்கு விருப்பமில்லை அப்படி எனக்கு எந்த பட வாய்ப்பும் வேண்டாம் என சொல்லிவிட்டேன். அதன் பிறகு தனுஷே கூப்பிட்டாலும் போக மாட்டீர்களா? என கேட்டார. உடனே நான், அந்த உரையாடலை நிறுத்திக் கொண்டேன்.

தனுஷ் கூப்டபோவியா: இதே போல வேறு ஒருவரும் தனுஷின் பெயரை பயன்படுத்தி, அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு வாய்ப்பு தருவதாக சொல்லி, அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கூறினார். எனக்கு மட்டுமல்ல இது போல பல நடிகைகளுக்கும் இதுபோல அழைப்பு வருகிறது. இது தனுஷ் அவர்களுக்கு தெரியாமல் நடக்கலாம். அதற்காகத்தான் இந்த விஷயத்தை நான் இப்போது வெளிப்படையாக சொல்கிறேன், இது என்ன என்று விரைவில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நடிகை மான்யா ஆனந்த் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X