Vanitha: மகனை பிரிந்து தவிக்கும் வனிதா.. ஒரே ஒருமுறை பேச வேண்டும்.. உருக்கமான பேட்டி!

சென்னை: விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா விஜயகுமார். குடும்பத்தை பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். எந்த கருத்தையும் தைரியாகவும், துணிச்சலாகவும் சொல்லக்கூடிய இவர், தனது குடும்பம், தந்தை மற்றும் மகன் குறித்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேட்டி அளித்துள்ளார். குறிப்பாக தனது மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் பேச ஒரு வாய்ப்பு வேண்டும் என மனம் உருகி பேசி உள்ளார்.

வனிதா பேட்டி: வனிதா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நான் என் குடும்பத்தோடு சேர வேண்டும் என நினைக்கவே இல்லை. அவர்கள் உண்மையிலேயே மாறி இருந்தால் மீண்டும் இணையும் வாய்ப்பு இருக்கலாம். ஆனால், அவர்கள் மாறாமல், அதே மனநிலையை கொண்டவர்களாக இருந்தால் நிச்சயம் அவர்களுடன் சேர விரும்பவில்லை. நான் கடந்த வந்த வேதனை, ஒரு மகளாகவும், ஒரு சகோதரியாகவும், ஒரு உறவினராகவும் நான் அனுபவித்த கஷ்டங்களுக்கு முக்கிய காரணம் எங்கள் அப்பாதான். என்னைப் பொறுத்தவரை குடும்பத் தலைவர் ஸ்ட்ராங்காக இருக்கணும். குழந்தைகள் சண்டை போடலாம், மருமகள்கள் வரலாம் ஆனால் வீட்டின் தலைவராக இருப்பவர் உறுதியாக இருக்க வேண்டும். எங்கள் அப்பா அப்படியில்லை. அம்மா இருந்தவரைக்கும் எல்லாம் நன்றாக இருந்தது. அம்மா போனதுக்குப் பிறகு அப்பா மொத்தமாக மாறிட்டார்.

Vanitha Vijayakumar Son Vijay Srihari
Photo Credit:

அப்பா செய்த தவறு: ஆனால், என் மகன் விஷயத்தில் நான் அப்படி இல்லை, என் மகனை நான் எப்போதும் விட்டுவிட மாட்டேன். நான் அப்படிச் செய்தால், என் அப்பா செய்த தவறை நானும் செய்த மாதிரி ஆகிவிடும். அதனால் அந்த தவறை நான் செய்யவே மாட்டேன். அந்த பிரச்சனை நடக்கும் போது யாரோ அவன் மனதை மாற்றியிருக்காங்க, இப்போ அவன் வளர்ந்துவிட்டான். ஒரு நாள் அவனுக்கே உண்மை புரியும், அம்மாவின் அருமை புரியும், ஒரு நாள் அவன் வந்து என்னுடன் உட்கார்ந்து பேசணும். என்ன நடந்தது, ஏன் நான் அந்த முடிவுகளை நான் எடுத்தேன் என்பதையெல்லாம் அவன் என் வாயிலிருந்து கேட்கணும்.

Vanitha Vijayakumar Son Vijay Srihari
Photo Credit:

மகனுடன் பேசணும்: எனக்கு ஜஸ்டிபிகேஷன் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இது என்னோட வாழ்க்கை. ஆனாலும், என்னோட வர்ஷனை அவன் கேட்கணும். அதன் பிறகும் அம்மா செய்தது தவறு என நினைத்தால், அது அவனுடைய முடிவு. ஆனால், என்ன நடந்தது என்பதை நான் சொல்ல ஒரு வாய்ப்பு அவன் எனக்கு கொடுக்கணும். அவன் என்னோட மகன். அதனால் ஒருநாள் அவன் என்னுடன் உட்கார்ந்து பேசுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X