எனக்கு ஆண் துணை தேவை.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. இதுல யாருக்கு என்ன பிரச்சனை.. வனிதா பளீச்
சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதிகளின் மகள் தான் வனிதா. விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்த வனிதா. அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து காணாமல் போன வனிதா, இப்போது மீண்டும் சினிமாவில் பல திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு மனம் திறந்து பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
கேள்வி: லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை நயன்தாரா வேண்டாம் என்று கூறினார் அதை பற்றி உங்கள் கருத்து?
பதில்: இது சர்ச்சைக்குரிய கேள்விதான். இதை நான் ஒரு காமெடியாக பார்க்கிறேன். யாரோ அந்த பட்டத்தை அவர்களுக்கு கொடுத்தார்கள், அதை வைத்து இருந்தார். அப்போது, பட்டம் வேண்டாம், பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் அதை திருப்பிக் கொடுத்து விட்டார். என் பெயரை ஒரு படத்தில் வைரல் ஸ்டார் வனிதா என்று போட்டார்கள். அப்பொழுது நான், தயவு செய்து அப்படி போடாதீர்கள் வனிதா விஜயகுமார் என்று போட்டாலே போதும் என்று சொல்லிவிட்டேன். இத்தனை நாள் நயன்தாரா அதை பயன்படுத்தி வந்தார்கள். இப்போது அவர்களுக்கு பிடிக்கவில்லை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இந்த முடிவுக்கு ஏதாவது நியூமராலஜி கூட இருக்கலாம். ஏனென்றால் அந்த பட்டம் வைத்ததில் இருந்தே, அவர் நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை. அந்த பெயரால் கோர்ட் கேஸ் என்றுதான் அலைந்து கொண்டிருக்கிறார். எதனால், அது வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கலாம். அது நயன்தாரா தனக்காக, படத்திற்கான எடுத்திருக்கும் முடிவு என்றார்.

பதில்: எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும், எப்பொழுதுமே என்னுடைய ஆதரவு அவருக்கு உண்டு. அடுத்து சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது அதில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது. இன்னொரு விஷயம் வென்றவென்றால், விஜய் எப்படி அரசியலுக்கு வரும் முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால், விஜய் இவ்வளவு தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்றால் நிச்சயமாக, அந்த முடிவில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் படத்தில் நடிப்பதை விட்டு, முழு நேரமாக அரசலில் ஈடுபட போகிறார் என்று சொல்லும்போது. அவர் நிச்சயமாக ஒரு ஊழலற்ற அரசியல்வாதியாக இருப்பார். ஏனென்றால், அனைத்தையும் பார்த்துவிட்டு அது எதுவுமே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு அரசியலுக்கு வரும் ஒருவர் மக்களிடமிருந்து கொள்ளையடிக்க மாட்டார். இதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது.
கேள்வி: நீங்கள் அரசியலுக்கு வர முடிவு செய்தால், விஜய்யின் கட்சியில் சேர்வீர்களா?
பதில்: அவர் கட்சியில் இணைந்து தான் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னுடைய ஆதரவு எப்பவுமே அவருக்கு உண்டு. இதனால் நான். அரசியலைப் பற்றி எப்பொழுதுமே
நான் நினைத்ததே இல்லை.
கேள்வி: உங்கள் அப்பா விஜயகுமார் உங்களிடம் பேசுகிறாரா?
பதில்: அப்பாவிடம் நான் தினமும் பேசியதில்லை என்றாலும் மனரீதியாக எப்பொழுதுமே அவரை நான் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்து விட்டால் வேறு நம்பரில் இருந்து போன் செய்து பேசுபேன். வனிதா பேசுகிறேன் என்றதும் போனை கட் செய்யாமல் பேசுவார். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லுவார். மறுபடியும் இரண்டு நாள் கழித்து அதே நம்பரிலிருந்து அவருக்கு போன் போட்டால், போனை பிளாக் செய்து இருப்பார். இப்படி தான் என் அப்பா எப்பொழுதுமே செய்வாரு நான் அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நேரடியாக வீட்டுக்கு சென்று பார்ப்பேன். என்னை எவன் தடுக்க முடியும் யாராலும் என்னை தடுக்க முடியாது தேவையே இல்லாமல் ஏதோ ஒரு வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் செய்யட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.
அவர்களுக்கு வேலை இல்லை எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது. நான் ஒரு அம்மா, எனக்கு இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறேன். அவர்களை பார்க்க வேண்டும். என் பையன் சினிமாவில் நடிகராக போகிறான். அவனுக்காக பிரார்த்தனை செய்கிறேன். நான் என் அப்பாவை பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பதால் அவர் என் வீட்டுக்கு கரண்ட் பில்லை சத்தியமாக கட்டப் போவது இல்லை. ஆனால் எப்பொழுதுமே என்னுடைய குடும்பத்தை நினைத்து எப்போதும் அழுவேன். அதே போல, என் மகனிடம் நான் பேசுவது இல்லை. அதில், பல பிரச்சனைகள் இருக்கிறது. அவன் குழந்தையாக இருக்கும் அப்பாவிடம் சென்றுவிட்டான். ஆனால், இப்போது வளர்ந்துவிட்டான். அப்போதுக்கூடவா அவனுக்கு அறிவு இல்லை என்று தான் கேட்கத் தோன்றுகிறது. இதனால், இப்போது நான் அவன் மீது கோவமாக இருக்கிறேன்.

நிச்சயமாக பெண்களுக்கு ஒரு ஆண் துணை தேவை. எப்பொழுதுமே நம்மளுடைய குழந்தைகள் நம்மை பாதுகாத்துக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி அவர்கள் நம்மை கவனித்துக் கொண்டே இருந்தால், அதுவே அவர்களுடைய வாழ்க்கையை கெடுப்பது போல ஆகிவிடும். இதனால் நமக்கான ஒரு பார்ட்னர் இருப்பது மிகவும் நல்லது. சரியான நேரத்தில், நம்மை புரிந்து கொண்டவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். நான் என் அப்பா, அம்மா வீட்டில் தொல்லை செய்கிறார்கள், கல்யாணம் ஆகி வேறவீட்டில் நன்றாக இருக்கலாம் நினைத்து, 20 வயதில் திருமணம் செய்து கொண்டு வீணாப்போனேன். அந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று பிரிவதால் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான் என்று வனிதா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்


Click it and Unblock the Notifications











