For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சவுண்ட் பார்ட்டியா? சைலண்ட் பார்ட்டியா?... வைரல் வனிதாவின் மென்மையான உண்மைகள் !

  |

  சென்னை : "வைரல் ஸ்டார் வனிதா" "பீனிக்ஸ் பறவை" என்றெல்லாம் ரசிகர்களால் ட்ரெண்டிக்காக அழைக்கப்படும் வனிதா விஜயகுமார், இயக்குநர் ஆர். கோபால் இயக்கத்தில் உருவாகி உள்ள 'அடங்காமை' படத்தின் பிரஸ்மீட்-ல் கலந்து கொண்டு பேசிய தைரியமான பேச்சு அடங்காமல் உள்ளது.

  படத்துல சம்பளத்தை விட எனக்கு கதைதான் முக்கியம் | Actress Vanitha Interview | Filmibeat Tamil

  இவர் மென்மையான வனிதாவா அல்லது நெருப்பு வனிதாவா என கணிக்க முடியாதவராகவே உள்ளார்.

  பிரபல நடிகை, தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட வனிதா விஜயக்குமார், பிக்பாஸ் தமிழ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் ஒன்று போன்றவற்றில் கலந்து கொண்டு ஒவ்வொருவர் இல்லத்திலும் உள்ளத்திலும் நிறைந்தார்.

  கோவிலுக்கு சொந்தமான பாம்பு படகில் செருப்புடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகை கைது.. குவியும் கண்டனம்! கோவிலுக்கு சொந்தமான பாம்பு படகில் செருப்புடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகை கைது.. குவியும் கண்டனம்!

  ரம்யாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக,பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்தும், விஜய் டிவியிலுருந்துமே முற்றிலுமாக விலகிவிட்டார். அடங்காமை ப்ரஸ்மீட்டிங் முடித்து நமது ப்லிம்பீட் தளத்திற்காக அளித்த பிரத்யேக பேட்டியில் இன்னும் அவரது பலமுகங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

  வெளித்தோற்றமும் சந்தோஷமும்

  வெளித்தோற்றமும் சந்தோஷமும்

  சிரித்த முகத்துடன் பொலிவாக வந்த வனிதாவிடம் ஸ்பெஷல் காரணம் ஏதாவது உண்டா என்று கேட்க,, உள்ளுக்குள் அமைதியும் சந்தோஷமும் இருந்தா வெளித்தோற்றமும் சந்தோஷமா இருக்கும். அது எல்லாருக்கும் கிடைக்கனும்' என சொல்லி நம்மிடையே பேச ஆரம்பித்தார்.

  அதையே சொல்ல காரணம் என்ன?

  அதையே சொல்ல காரணம் என்ன?

  கேள்வி: "தமிழ் பெண்களுக்கு சினிமா வாய்ப்பு குறைவு என்ற கருத்தை நீங்கள் முன்வைப்பது பற்றி விரிவாக சொல்லுங்களேன்?"

  பதில்: தமிழ்நாட்டை நம்பி வந்து இங்க செட்டில் ஆன, தெலுங்கு, மலையாள, கன்னட நடிகர்கள் இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு தரனும் இல்லன்னு சொல்லல. அது போல இங்கிருந்து அங்க போனவங்களும் உண்டு. ஆனால் தமிழ் நாட்டுலயே, இத மட்டுமே நம்பி இருக்கிறவங்களுக்கு வாய்ப்புகள் தரனும்ங்கிறது தான் என் வேண்டுகோள். சின்ன பட்ஜெட் படங்கள்ல அது நடக்கும். ஆனா பெரிய பட்ஜெட் ல பார்த்தா தொழில் நுட்பகலைஞர்கள்லேர்ந்து, நடிகர் நடிகை வரைக்கும் வெளி ஆட்கள்தான். ஒரு நடிகைன்னா, அவங்க உதவியாளர், கூட வர்றவங்கன்னு எல்லாருக்கும் டிக்கெட் போட்டு சம்பளம் குடுத்து தமிழ் தெரியாத, வெளி மாநில ஆட்கள கொண்டாடுறது பெரிய பட்ஜெட் படங்கள்ல சர்வ சாதாரணமா நடந்துகிட்டு இருக்கு. ரொம்ப வருத்தத்திற்குரியது. அது குறைஞ்சி இங்க இருக்க தமிழ் மக்களுக்கும் வாய்ப்புகள் தரனும். அவங்களும் வாழனும் வளரனும்.

  அடுத்த அவதாரம்

  அடுத்த அவதாரம்

  கேள்வி : " நடிகையா, தயாரிப்பாளரா கூட வந்தாச்சு.வனிதாவின் அடுத்த அவதாரம் என்ன?"

  பதில் : குழந்தையிலிருந்தே எனக்கு இந்த சினிமா இண்டஸ்ட்ரி தவிர வேற எதுவும் தெரியாது. என்னுடைய பாலிசி கதை பிடிச்சிருந்தா, கதாபாத்திரம் பிடிச்சிருந்தா அது சின்ன படம் பெரிய படம்,டைரக்டர் யாரு, ஹீரோ யாருன்னுல்லாம் பார்க்காமல் நடிச்சுக்கிட்டு இருக்கேன். புது படம் புதுமுக நடிகர்கள் அறிமுக இயக்குனர்கள் இப்படி இருந்தாலும் பன்றேன். ஏன்னா நாமும் அடுத்து வர்றவங்களுக்கு சப்போர்ட் பண்ணி ஆகணும். இது மாதிரி பெரிய படங்களுக்கு நிறைய பேர் பண்றது இல்ல. பண்ணினா கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்.

  எல்லாம் நேரம்..

  எல்லாம் நேரம்..

  கேள்வி: " வட இந்திய நடிகைகள் தான் டைம் கீப்-அப் பன்றாங்களாமே.. அப்படியா?"

  பதில்: அப்படின்னா இங்க இருக்கவங்கல்லாம் டைம் க்கு வர்றதில்லயா? அதெல்லாம் சும்மா வதந்தி. அப்படி சொல்லி அவங்களுக்கான வாய்ப்ப வாங்கிக்கிறாங்க. இங்க உள்ளவங்க எத்தனையோ பேர் சொன்ன டைம்க்கு நச்சுன்னு வர்றவங்க இருக்காங்க. என்ன ஒன்னு சென்னைல ட்ராபிக் ஒரு காரணமா இருக்கலாம். அதுக்காக இங்க இருக்கவங்க எல்லாருமே அப்படின்னு முத்திரை குத்தறதுல்லாம் தப்பு. அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. அத யாரும் நம்ப வேண்டாம்.

  உலகம் சுற்றும் வாலிபன் எம் ஜி ஆர்

  உலகம் சுற்றும் வாலிபன் எம் ஜி ஆர்

  கேள்வி: "இப்போ சமீபத்தில் ரீ-ரிலீசாகி இருக்கற உலகம் சுற்றும் வாலிபன் படத்துல உங்க அம்மாவும் நடிச்சிருக்காங்க. அந்த படம் பற்றி.."

  பதில்: அம்மா சினிமாத்துறைக்கு வந்து 50 வருஷம் ஆகுது. இந்த நேரத்துல இந்த படம் வந்தது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. மக்கள்கிட்ட இன்னும் நல்ல வரவேற்பு இருக்கு. தியேட்டர்ல போய் எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அந்த படத்தை அம்மா கூட நிறைய தடவை உட்கார்ந்து பார்த்து இருக்கேன். அம்மா அடிக்கடி பாரு பாரு ன்னு சொல்லியே பல டைம் பார்த்திருக்கேன். ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் அம்மாவுக்கு ஒரு முக்கியமான படம். ஒவ்வொரு நாடுகளுக்கும் போய் வித விதமா சீன்ல்லாம் வர்றப்போ, அதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு என்னமோ அங்க எல்லாம் டிராவல் பண்ணி போற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு.

  ஏன்னு காரணம் தெரியுமா?

  ஏன்னு காரணம் தெரியுமா?

  கேள்வி: மற்ற மொழிப்படங்களும் தமிழ்படங்களும் எப்படி இருக்கு?

  பதில் :சமீப காலமா தெலுங்கு,மலையளம், ஹிந்தி படங்கள் இதோட ரிலீஸ்களை விட தமிழ் சினிமாவுல படங்கள் ரிலீஸ் ஆகிய படங்கள் ரொம்ப குறைவா இருக்கு . அது மட்டும் இல்லாம, ஓடிடி ல் வெளியாகுற படங்கள்லயும், தமிழ் படங்கள் ரொம்பவே குறைவு. இது மாறனும். புதுசா வர்றவங்களுக்கும் இங்கே இருக்கிற மக்களுக்கும் வாய்ப்பு நிறைய கொடுக்கணும். அப்படி கொடுத்தால் நல்லா இருக்கும்.

  கலாய்க்கிறதெல்லாம் கஷ்டமா இல்லயா?

  கலாய்க்கிறதெல்லாம் கஷ்டமா இல்லயா?

  கேள்வி: "வைரல் வனிதா, ஃபீனிக்ஸ் வனிதா -ன்னு உங்கள பத்தி ட்ரெண்டிங்-ஆ சொல்லிட்டு இருக்காங்க அத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ?"

  பதில்: இதுல மத்தவங்க சொல்றத கேட்க எனக்கு நேரமில்ல. பிரச்சனைகள் நம்மள காலை வாரிவிடும். இருக்கத்தான் செய்யும். வாழ்க்கையில அதெல்லாம் வரும் அப்படி வந்தால் தான் வாழ்க்கை. அப்பதான் சுவாரசியமாக இருக்கும். எல்லாமே ஈசியா இருந்து எல்லாமே சரியா இருந்துச்சுன்னா அடுத்தது என்ன -ன்னு ஒரு விஷயமே இருக்காது. ஏன்னா எனக்கு அப்படியே பழகிடுச்சு. கடவுள் கூடவே இருக்காருங்கிறது என் கண்ணுக்கு ரொம்ப நல்லாவே தெரியுது, உணர முடியுது.

  சென்னையில பிடிச்சவை

  சென்னையில பிடிச்சவை

  கேள்வி: வனிதாவுக்கு சென்னையில பிடிச்ச விஷயங்கள் எது ?

  பதில் : சென்னையே ரொம்ப பிடிக்கும். அதிலேயும் பழைய மெட்ராஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏன்னா பழைய தெலுங்கு இண்டஸ்ட்ரி, மலையாளம் இண்டஸ்ட்ரி எல்லாமே ரொம்ப ஜொலித்த இடம் இந்த பழைய மெட்ராஸ். அந்த மெட்ராஸ நான் ரொம்பவே மிஸ் பண்றேன். அப்பறம் மெரினா பீச் ரொம்பவே பிடிக்கும் .வெளிநாடுகளில் போய் தங்கி படிச்சிருக்கேன் அங்கேயே தங்கி இருந்துருக்கேன். ஆனா எப்படா சென்னைக்கு வருவோம்ன்னு இருக்கும். இங்கே வந்ததுக்கப்புறம் அப்பாடா நம்ம ஊரு, நம்ம சென்னை அப்படின்னு ஒரு சந்தோஷம் கிடைக்கும் .அது மட்டும் இல்லாமல் நம்ம அரசாங்கமும் ரொம்ப நல்லவிதமாக நடந்துக்கிட்டு இருக்கு. நம்பிக்கையூட்டும் விதமாக இருக்காங்க. அத அவங்க பாத்துப்பாங்க அப்படிங்கிற நிம்மதியை கொடுக்குது.

  பயப்பட வேண்டாம்

  கேள்வி : "எல்லாருக்கும் ஒரு நச் மெசேஜ்...?"

  பதில்: நம்ம யாருக்கும் கெடுதல் பண்ணலன்னா நமக்கு வழி, தெளிவு எல்லாமே கரெக்டா இருக்கும். கர்மா இந்த மாதிரி விஷயங்களுக்கு பயப்பட வேண்டாம். நம்பிக்கையை மட்டும் விட்ராதீங்க தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்க. அடங்காமை , அமைதி இரண்டும் கலந்த வெற்றிப் பெண்மணியான வனிதா விஜயகுமாரிடம் இன்னும் பேசிக்கொண்டே இருக்கலாம் என்றுதான் இருந்தது. அத்தனை சுவாரஸ்யங்கள். வனிதா விஜய குமாரின் கலகலப்பான முழு வீடியோவையும் காண பில்மிபீட் தமிழ் யூட்யூபை கிளிக் செய்யவும்.

  English summary
  Bigg Boss Actress Vanitha Vijayakumar exclusive interview, she shared lot of interesting information.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X