பல ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கேன்.. ஆனால் அந்த தப்பை செய்ததில்லை.. வனிதா விஜயகுமார் பளிச்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் இருக்கும் தைரியமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவர். இவர் பிரச்னையைத் தேடிச் செல்கிறாரா, அல்லது பிரச்னைகள் இவரைத் தேடி வருகிறதா என்று சொல்வது கடினம் என்று கூறும் அளவுக்கு பிரச்னைகளையும் அவரையும் பிரிக்கவே முடியாது.
என்னதான் பிரச்னைகள் சர்ச்சைகள் என அவரைச் சுற்றி இருந்தாலும், வனிதா விஜயகுமார் மிகவும் தைரியமான பெண். தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் தனது மகள்கள் இருவரையும் தனித்தே நின்று அளாக்கும் தைரியமான பெண். குடும்பத்தினர் உடன் இல்லை என்றாலும் தனக்கான பாதுகாப்பிற்காக மற்றவர்களை சார்ந்து இருப்பதை விரும்பாத வனிதா, தன்னை ஒரு கரடுமுரடான பெண்ணாகவே வெளியில் காட்டிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் உள்ளபடியே பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்று அவருடன் நெருங்கிப் பழகிய பலரும் தெரிவித்துள்ளனர்.
வனிதா விஜயகுமார்: நெட்டிசன்கள் பலரும் அவர் மீது வைக்கும் விமர்சனம் என்றால், வனிதா விஜயகுமார் அதிக ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர், மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர் என்றெல்லாம் விமர்சித்தனர். ஒரு நடிகையை அவரது நடிப்பு தொடர்பாகவோ, பொதுவெளியில் அவரது செயல்பாடுகள் குறித்தோ விமர்சிப்பது முறை, ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது தவறு என்று அவருக்கு சாதகமாக பலரும் பதில் அளித்து வந்தனர்.

அந்த தப்பை மட்டும் செய்ததே இல்லை: இப்படி இருக்கையில் பேட்டி ஒன்றில் வனிதா விஜயகுமார் தனது ரிலேஷன்ஷிப் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, " நான் பல ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன். ஆனால் நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஒருவரிடமும் பணம் கேட்டது இல்லை. நான் 22 வருடங்களாக தனித்து எனது சொந்தக் காலில்தான் நிற்கிறேன், அதை நான் பெருமையாக சொல்வேன். நாம் ஒரு உறவில் இருக்கும் போது, அது கொஞ்சம் சரி வரவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டு விலகுவது நல்லது.
அப்பா - அம்மாவே: அப்படி விலகுவதுதான் சரியான விஷயமும் கூட. எக்காரணம் கொண்டும் பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்லுவான், சமூகம் என்ன சொல்லும்னு எல்லாம் யோசிக்கவே கூடாது. ஏன் உங்க அப்பா, அம்மாவே உங்களை எதிர்த்து நின்றாலும், பிடிக்காத உறவில் உங்களை இருக்கச் சொல்லி நிர்ப்பந்தித்தாலும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், விலகி போவது தான் உங்களுக்கு நீங்கள் செய்யும் நீதி" என்று தெரிவித்துள்ளார். வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications