பீட்டர் பால் மரணத்துக்கு கூட போகாதது ஏன்?.. எல்லாரும் சேர்ந்து கெடுத்துட்டாங்க.. வனிதா விஜயகுமார் பகீர்!

சென்னை: 44 வயதாகும் நடிகை வனிதா விஜயகுமார் ஹீரோயினாக தனது முன்னாள் காதலர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்துள்ள மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். சமீபத்தில், அளித்த பேட்டியில், பீட்டர் பால் மரணத்துக்கு கூட ஏன் போகவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் வனிதா விஜயகுமார் ஹீரோயினாக நடித்துள்ளார். அடல்ட் கன்டென்ட் அதிகம் நிறைந்துள்ள ரொமான்டிக் படமாக இந்த படம் உருவாகியிருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

Vanitha Vijayakumar reveals why she didn t attend her 3rd husband Peter Paul death

மேலும், தனது குடும்பமே சேர்ந்து தன்னை ஒதுக்கியது குறித்தும் பீட்டர் பாலின் மனைவி ஒரு டிராமா ஆர்ட்டிஸ்ட் போல வந்தார் என்றும் ஏகப்பட்ட விஷயங்களை பேசியுள்ளார்.

விஜய்யை காதலித்தேன்: நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். கிளைமேக்ஸ் காட்சியில் எப்படிம்மா கிளிசரின் இல்லாமல் அழுவது என அம்மாவிடம் கேட்க, அவர் ஏதாவது கஷ்டமான சூழ்நிலையை நினைத்துக்கொள் என்றார். நான் உண்மையாகவே நான் விஜய்யை காதலித்து என் பெற்றோர்கள் பிரித்தால் என்ன ஆகும் என நினைத்து அந்த காட்சியில் அழுது நடித்தேன் என வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். ஆரம்ப காலத்தில் விஜய்யும் விஜய் சேதுபதி மகனை விட மோசமாக ட்ரோல் செய்யப்பட்டவர் தான் என்றும் சூர்யா சேதுபதியும் ஒரு நாள் மிகப்பெரிய நடிகராக மாறுவார் என்றும் பிரஸ்மீட்டில் பேசியது வைரலாகி வருகிறது.

பீட்டர் பால் மரணத்துக்கு ஏன் போகல: ஆகாஷ் என்பவரை 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட வனிதா விஜயகுமார் 2007ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதே ஆண்டு ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட வனிதா 2012ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த இருவரையும் திருமணம் செய்த வனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 3வதாக பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட வனிதா விஜயகுமார் சில மாதங்களில் அவரை விட்டு பிரிந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஆனால், அந்த மரணத்துக்கு கூட வனிதா செல்லாதது ஏன் என்கிற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.

எல்லாரும் சேர்ந்து கெடுத்துட்டாங்க: பீட்டர் பால் ரொம்பவே நல்ல மனுஷன். இன்று வரை அவரது நினைவுகளில் வாழ்ந்து வருகிறேன். அவரால் தான் யூடியூப் சேனல் ஆரம்பித்து இன்று 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அவருக்கு குடிப்பழக்கம் உள்ளிட்டவை இருக்கு என எனக்குத் தெரியாது. டிராமா ஆர்ட்டிஸ்ட் போல அவரது மனைவி திடீரென 8 ஆண்டுகள் கழித்து வந்து பிரச்னை பண்ண நிலையில், அவரை விட்டுப் பிரிந்தேன். அவரது உயிரை 2 முறை என்னால் முடிந்தவரை காப்பாற்றினேன். கடைசியில் அவர் இறந்ததை அறிந்ததும் வீட்டிலேயே சைலன்ட் பிரேயர் பண்ணேன். அங்கே போய் ஒரு டிராமாவை க்ரியேட் பண்ண நான் விரும்பவில்லை என பதில் அளித்துள்ளார். நாங்க சேர்ந்து வாழும் போது எல்லாரும் சேர்ந்து கெடுத்துட்டாங்க, அப்புறம் உங்களுடன் அவர் வாழ்ந்திருந்தால், உயிருடன் இருந்திருப்பார் என்கின்றனர் என பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X