ஜோவிகா லவ் பண்ண மாட்டா.. நல்லவேளை அவள காலேஜுக்கு அனுப்பல.. வனிதா விஜயகுமார் செம ஓபனா சொல்லிட்டாங்களே!
சென்னை: நடிகை தேவயாணி மகளுக்கும் நடிகை வனிதா விஜயகுமார் மகளுக்கும் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய கம்பேரிசன் மற்றும் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் குவிந்து வரும் நிலையில், வனிதா விஜயகுமார் தனது மகளுடன் அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மாவை போல ஜோவிகா பங்கேற்ற போது அவருக்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு பெருகிறது.
ஆனால், ஒரு கட்டத்தில் அவர் தொடர்ந்து விசித்ராவுடன் சண்டையிட்டு வந்த நிலையில், அவருக்கு எதிரான கருத்துக்களும் ட்ரோல்களும் குவிந்தன. நடிகரும் இயக்குநருமான பார்த்திபனிடம் உதவி இயக்குநராக 'டீன்ஸ்' படத்தில் பணியாற்றிய ஜோவிகா தற்போது அம்மா வனிதா விஜயகுமார் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் படத்தை தயாரித்துள்ள நிலையில், மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் படத்தை புரமோட் செய்து வருகிறார்.

கல்லூரிக்கு மகள் செல்லவில்லை என்றும் இப்பவே தன்னை அவர் ரொம்ப கன்ட்ரோல் செய்வதாகவும் வனிதா விஜயகுமார் அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஜோவிகா லவ் பண்ண மாட்டா: பிக் பாஸ் பிரபலமான ஜோவிகா விஜயகுமார் தொடர்ந்து தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார். ஹீரோயினாகவும் தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் நடிக்கப் போவதாக வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். அம்மா நடித்துள்ள படத்தை இணை தயாரிப்பாளராக தற்போது தயாரித்துள்ள ஜோவிகா குறித்து பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் பேசிய வனிதா விஜயகுமார், தனது மகள் ஒருபோதும் லவ் பண்ணவே மாட்டா என்றும் காதல் எந்தளவுக்கு வலி தரும் என்பதை அவர் தன்னுடைய வாழ்வில் இருந்தே அறிந்துக் கொண்ட நிலையில், அவர் காதலிக்கவே மாட்டார் எனக் கூறியுள்ளார்.
நல்லவேளை காலேஜுக்கு அனுப்பல: பள்ளி படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் பணியாற்றி வரும் ஜோவிகா அந்த பேட்டி முழுவதும் ஆங்கிலத்தில் அம்மாவுக்கு ஏகப்பட்ட அட்வைஸ் சொல்வது போல பேசி வந்தார். அப்போது, இப்படித்தான், மிராக்கள் என சொல்லக் கூடாது, மிராக்கிள் என சொல்லணும்னு எப்போதுமே அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருப்பா, நல்லவேளை இவளை காலேஜுக்குலாம் அனுப்பல, அப்படி இருந்தும் செம ஸ்மார்ட்டாக பல விஷயங்கள் குறித்து பேசுவா, என்னை கன்ட்ரோல் பண்ணிட்டே இருப்பா என மகள் குறித்து பெருமையுணர்வுடன் வனிதா விஜயகுமார் ஜாலியாக அவரை கலாய்க்கும் தொனியில் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மொத்த வீடே எதிர்த்து நின்னது: இப்போதெல்லாம் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என்றால் டாட்டா பை பை சொல்லிவிட்டு டைவர்ஸ் செய்து கிளம்பி விடுகின்றனர். ஆனால், முதன்முதலில் நான் டைவர்ஸ் பேச்சை எடுத்தப்ப மொத்த வீடும் ஒன்றாக சேர்ந்து என்னை எதிர்த்து வெளியே தள்ளியது என தனது வாழ்வில் அனுபவித்த சோகங்கள் குறித்தும் வனிதா விஜயகுமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அடல்ட் படமா?: மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் திரைப்படம் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நடிப்பில் உருவாகியுள்ள நிலையில், காதலர் தினம் முதல் ஏகப்பட்ட புரமோஷன்கள் நடைபெற்று வந்தன. வரும் ஜூலை 4ம் தேதி அந்த படம் வெளியாகவுள்ள நிலையில், இது ஃபேமிலி படமா? அல்லது அடல்ட் படமா? ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் தான் தென்படுகின்றன என்கிற கேள்விக்கு, படத்தில் இரண்டுமே சரி சமமாக இருக்கும் என வனிதா விஜயகுமார் பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











