இரண்டு திருமணம், இரண்டு விவாகரத்து.. ஜீவனாம்சம் கேட்டதே இல்லை.. யாரிடமும் கையேந்தியதில்லை வனிதா!
சென்னை: தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. தனது வாழ்க்கை, உறவுகள் மற்றும் பொருளாதார நிலை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ள அவர், இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு, இரண்டு முறை விவாகரத்து பெற்றும், யாரிடமும் ஜீவனாம்சம் கேட்டதே இல்லை என கூறியுள்ளார்.

வனிதா விஜயகுமார்: IndiaGlitz Tamil யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், என் பெயரில் எந்த சொத்துக்களும் இல்லை, இன்றைய தேதியில் என் பெயரில் ஒரு வீடு கூட இல்லை. என் பணத்தில் கூட நான் எதையும் வாங்கவில்லை. நகையோ, FD என எதுவுமே என்னுடைய பெயரில் இல்லை. யாரும் எனக்கு எதையும் செய்து செய்யவும் இல்லை கொடுக்கவும் இல்லை. இரண்டு முறை திருமணம் செய்து, இரண்டு முறை விவாகரத்து பெற்றிருக்கிறேன். ஆனால், அவர்களிடம் இருந்து நான் ஜீவனாம்சம் வாங்கியதில்லை. மாதம் இவ்வளவு பணம் தர வேண்டும், குழந்தைகள் பராமரிப்புக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டதில்லை. தற்போது வரை நான் போராடிக்கொண்டு தான் இருக்கிறேன். அது நான் எடுத்த முடிவு.
பல ரிலேஷன்ஷிப்: எனக்கு நான் நானாக இருக்க வேண்டும், என் சொந்த காலில் நிற்க வேண்டும், யாரையும் நம்பக் கூடாது என்பதை என் 22 வயதில் தெரிந்துகொண்டேன். கணவரை கூட நம்பக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தேன். எவ்வளவு பெரிய வாழ்க்கையாக இருந்தாலும் நாம நம்ப காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். கடந்த 25 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் பல ரிலேஷன்ஷிப்பில் இருந்து இருக்கிறேன். அது தனிப்பட்டது தான். அதற்காக நான் யாரிடமும் பணம் கேட்டதில்லை. யாரும் எனக்கு பணம் கொடுக்க வேண்டியதும் இல்லை. இதை சொல்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன் என வனிதா விஜயகுமார் அந்த பேட்டியில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications