For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நூறு கோடிக்கு ஏறிய சம்பளம்.. பெரிய ஹீரோக்களை வெளுத்து வாங்கிய வனிதா விஜயகுமார்.. வைரலாகும் வீடியோ!

  |

  சென்னை: இயக்குநர் ஆர். கோபால் இயக்கத்தில் உருவாகி உள்ள 'அடங்காமை' படத்தின் பிரஸ்மீட் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

  அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலரும் விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளம் குறித்து அதிகளவில் பேசி விளாசித் தள்ளினர்.

  நடிகை வனிதா விஜயகுமார் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய போதும் பெரிய நடிகர்கள் மட்டுமே இங்கே அதிக சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், சினிமா உலகம் எந்த அளவுக்கு கஷ்டத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை என விளாசித் தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

  அண்ணாத்த எப்படி இருக்கு தலைவா... ரஜினி கொடுத்த அசத்தல் விமர்சனம் அண்ணாத்த எப்படி இருக்கு தலைவா... ரஜினி கொடுத்த அசத்தல் விமர்சனம்

  திருக்குறள் தலைப்பு

  திருக்குறள் தலைப்பு

  "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" எனும் திருக்குறல் தலைப்பையே படத்திற்கு அருமையாக வைத்துள்ளார் இயக்குநர் ஆர். கோபால். வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கும் இந்த படத்தில் இலங்கையை சேர்ந்த சரோன் ஹீரோவாகவும், ஆந்திராவை சேர்ந்த பிரியா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

  என்ன கதை

  என்ன கதை

  சிறு வயதில் இருந்து ஒன்றாக பழகிய மூன்று நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையை தேர்வு செய்ய ஒருத்தர் டாக்டராகவும், ஒருவர் சினிமா நடிகராகவும் இன்னொருவர் அரசியல்வாதியாகவும் ஆகின்றனர். டாக்டர் நண்பரை வளர்த்தெடுத்த பாதிரியாரின் மர்ம மரணத்திற்கு மற்றவர்கள் உதவி செய்தார்களா? இல்லை அவர்கள் இந்த கொலைக்கு காரணமா? என்கிற ட்விஸ்ட்டுடன் கதை உருவாகி உள்ளதாக இயக்குநர் பிரஸ்மீட்டில் தெரிவித்துள்ளார்.

  எல்லாமே சோஷியல் மீடியா

  எல்லாமே சோஷியல் மீடியா

  நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் இந்த பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய போது, இப்போதெல்லாம் இப்படியொரு பிரஸ் மீட்டுக்கு வருவது என்பதே அரிதான ஒன்றாக மாறிவிட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் நடிகர்களின் திருமணங்கள் வரை சோஷியல் மீடியாவிலேயே முடிந்து விடுகின்றன என பேச அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

  நூறு கோடி சம்பளம்

  நூறு கோடி சம்பளம்

  ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பெரிய ஹீரோக்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பது தமிழ் சினிமாவுக்கே வந்த சாபக்கேடு என தயாரிப்பாளர்கள் மற்றும் சில இயக்குநர்கள் காட்டமாக அடங்காமை பிரஸ் மீட்டில் பேசினர். நடிகை வனிதா விஜயகுமாரும் பெரிய ஹீரோக்கள் மட்டுமே அதிகளவில் சம்பாதிக்கின்றனர். சின்ன நடிகர்கள் மற்றும் சினிமா உலகம் பெரிதாக சம்பாதிப்பதே இல்லை என்கிற குற்றாச்சாட்டை முன் வைத்து முன்னணி நடிகர்களை விளாசித் தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

  புது வீடு

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தினார். ஆனால், சமீபத்தில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அவருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறிய நடிகை வனிதா விஜயகுமார் புது வீடான கலர்ஸ் தமிழில் பல தொடர்களில் கமீட் ஆகி வருகிறார். மேலும், நடிகர் பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டார் உடன் பிக்கப் உள்ளிட்ட பல படங்களும் கைவசம் உள்ளன.

  English summary
  Vanitha Vijayakumar slams top actors huge salary at Adangamai press meet video goes viral in internet. She also request big actors take cares about the Cinema Industry also in the tough times.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X