என் முதல் காதலை பற்றி சொன்னா தமிழ்நாடே அதிருமே.. வனிதா உடைத்த உண்மை.. அந்த டாப் ஹீரோவா?

சென்னை: பழம்பெரும் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் - மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், எப்போதுமே சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவராகவே இருக்கிறார். எதற்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களைப் பொதுவெளியில் பேசும் குணம் கொண்ட இவர், அண்மையில் ஒரு யூடியூப் நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் அவரிடம் கேட்கப்பட்ட 'முதல் காதல்' குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில், இப்போது சோசியல் மீடியாவில் டாப் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.

தமிழ்நாடே அதிரும்: தனது முதல் காதல் குறித்துப் பேசிய வனிதா விஜயகுமார், என்னுடைய முதல் காதல் குறித்துப் பேச வேண்டும் என்றால், என்னால் இப்போது வெளிப்படையாகப் பேச முடியாது. என்னை முதன்முதலில் காதலித்தது யார் என்றோ, அல்லது நான் யாரை முதன்முதலில் காதலித்தேன் என்றோ என்னால் வெளியே சொல்லவே முடியாது. அப்படி நான் உண்மையைச் சொன்னால், ஒட்டுமொத்த தமிழ்நாடே அதிர்ந்துவிடும். அதனால் நான் அதைச் சொல்லாமல் மௌனமாக இருப்பதே நல்லது. அதைச் சொல்லாமலேயே பல வருடங்களை நான் கடந்து வந்துவிட்டேன். என்னுடைய நினைவுகள் எப்போதுமே எனக்குள் மட்டும்தான் இருக்கும். இந்த ரகசியம் எனக்கும், சம்பந்தப்பட்ட அந்த நபர் என இரண்டு பேருக்குமே மிக நன்றாகத் தெரியும் என்று மர்ம முடிச்சோடு தனது பேட்டியை முடித்துக் கொண்டார்.

Vanitha Vijayakumar interview
Photo Credit:

ரசிகர்கள் கிளப்பும் புதிய சந்தேகம்: வனிதா இப்படிப் பேசியதைத் தொடர்ந்து, சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் அந்த நபர் யாராக இருக்கும் என்று தீவிரமாகத் தோண்டத் தொடங்கிவிட்டனர். வனிதா விஜயகுமார் முதன்முதலாகத் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் 'சந்திரலேகா'. அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய் ஆவார். அறிமுகமான முதல் படத்திலேயே இருவரும் ஜோடியாக நடித்ததால், ஒருவேளை வனிதா விஜயகுமார் குறிப்பிட்ட அந்த 'முதல் காதல்' நபர் நடிகர் விஜய் தானோ? என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகளைப் பகிர்ந்து தங்களது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். வனிதாவின் இந்த ஒற்றைப் பேட்டி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சுவாரசியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X