18+ கன்டென்ட்.. பிக் பாஸ் நிகழ்ச்சியை இழுத்து மூடுங்க.. கொந்தளித்த வனிதா!
சென்னை: பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், கார் டாஸ்கில் காருக்குள் இருந்து சாண்ட்ராவை எட்டி உதைத்த பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பினார் விஜய் சேதுபதி. இது குறித்து வனிதா விஜயகுமார்
Behind Talkies youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட பிறகும், பல சீசன்களை நான் விமர்சனம் செய்து இருக்கிறேன். ஆனால், இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மீது எனக்கு பலவிதமான அதிருப்திகள் இருந்தது. அது மட்டுமில்லாமல் பல எபிசோடுகளை நான் பார்த்து இருக்கிறேன். பார்வதியும் கம்ருதீனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் இருவரும் தனி அறையில், கட்டி பிடித்துக் கொள்வதும், முத்தம் கொடுத்துக் கொண்டார்கள் பல வீடியோக்கள் இணையத்தில் பார்த்தேன். அது காதலே கிடையாது. இதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்குள் வந்தார்களா.. அசிங்கமா இல்ல, இவ்வளவு பெரிய மீடியாவில் அத்தனை கேமராக்கள் இருக்கும்போது வருவது எப்படி காதலாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.

வனிதா விஜயகுமார்: நான் கலந்து கொண்ட சீசனில் ஓவியா ஆரோவை உண்மையாகவே காதலித்தார். அந்த விஷயங்கள் எனக்கு நன்றாகவே தெரியும். கடைசியில் அந்த காதல் என்ன ஆனது என்று அனைவருக்கும் பார்த்தார்கள். மருத்துவ முத்தம் வரை சென்றது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது காதல் வரலாம் ஆனால், அவர்கள் வெளியில் வந்தவுடன் திருமணம் செய்து கொள்வார்கள், குழந்தை பெற்றுக் கொள்வார்கள் என சொல்ல முடியாது. இந்த தவறு ஒருமுறை நடந்தால் ஏதோ தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு நடந்து விட்டது என சொல்லலாம். ஆனால், பார்வதி மற்றும் கம்ருதீனும் தொடர்ந்து இதே போல 18 ப்ளஸ் கன்டென்டுகளை கொடுத்தார்கள் இந்த நிகழ்ச்சியை குடும்பங்கள் பார்க்க முடியல.
தன்மானம் தான் முக்கியம்: அதுமட்டுமில்லாமல் கார் டாஸ்கில் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்வது முதல், கெட்டவார்த்தையில் பேசுவது என பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார்கள். சினிமாவில் கெட்டவார்த்தைகள் வந்தால் மியூட் போடுவார்கள். ஆனால், குடும்பத்தோடு அனைவரும் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில், அனைவரும் சரளமாக கெட்ட வார்த்தைகளை பேசுகிறார்கள், அநாகரீகமாக, சில்லறைத்தனமாக நடந்து கொள்கிறார்கள் முதலில் இந்த நிகழ்ச்சியை இழுத்து மூட வேண்டும். அதேபோல இப்படி ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால் அந்த வீட்டை விட்டு சாண்ட்ரா வெளியே வந்து இருக்க வேண்டும். தன்மானத்தை விட, மானத்தைவிட பணம் முக்கியம் இல்லை என்று வனிதா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











