நான் கோவக்காரி.. ரௌடி .. எது சரியோ அதை செய்வேன்.. வரலட்சுமி பொளேர் பொளேர்!

சென்னை : சிறுவயதில் இருந்தே நான் ரௌடிதான், கோவக்காரி என்னிடம் பேசவே பயப்படுவாங்க என்று நடிகை வரலட்சுமி கூறினார்.

Recommended Video

Varalakshmi Opens up #MeeToo | Varalakshmi Sarathkumar | Neeya 2

நடிகை வரலஷ்மி சரத்குமார் நாயகியாக போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் தொடர்ந்து மாறுபட்ட படங்களிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் வரலஷ்மி .

முக்கியமாக சத்யா , சர்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நேரடி வில்லியாக நடித்து அசத்தியிருப்பார் வரலஷ்மி . எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி படத்திலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 வெல்வெட் நகர நாயகி

வெல்வெட் நகர நாயகி

தற்போது வரலஷ்மி வெல்வெட் நகரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகன் அற்ற நாயகியாக நடித்து இருக்கிறாராம் வரலஷ்மி . வெல்வெட் நகரம் குறித்த விளம்பரங்களில் பேசும் போது, நான் இந்த படத்தில் பத்திரிக்கையாளராக நடித்து உள்ளதாக கூறியுள்ளார். இந்த படத்தில் பத்திரிக்கை ரீதியாக ஒரு பிரச்சனையை சந்தித்து அதில் சிக்கி இறுதியில் எப்படி வெளியே வருகிறேன் என்பது தான் கதை என்று ஓபனாக கூறினார்.

 தேடி வரும் கதைகள்

தேடி வரும் கதைகள்

மேலும் நாயகன் அற்ற கதைகள் என்னை தேடி அதிகம் வருவதாகவும் கூறினார் . முக்கியமாக இது வரவேற்க வேண்டிய விசயம் என்றும் கூறினார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள் மிக குறைவு இதனால் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் என்றால் அது சரியான கதையுடன் இருந்தால் நான் கட்டாயம் நடிப்பேன் நடித்தும் வருகிறேன் என்று கூறினார் .

 கதாபாத்திரங்கள்

கதாபாத்திரங்கள்

வரலஷ்மி நடிக்க வந்த சில வருடங்களிலே பல விதமான கதாபாத்திரங்கள் மற்றும் பல விதமான கதைகளில் நடித்து விட்டார். முக்கியமாக வில்லியாக தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார் . இது பல ரசிகர்களால் பாராட்டபட்டு வருகிறது. மேலும் நான் சிறு வயதில் இருந்தே ரௌடி தான் என்று கூறியுள்ளார். சிறுவயதில் இருந்து நான் மிகவும் கோவக்காரி யாரும் என்னிடம் சண்டையிடவே பயப்படுவார்கள்.

 சரின்னு பட்டா செய்வேன்

சரின்னு பட்டா செய்வேன்

எது மனதிற்கு சரியோ அதை மட்டும் தான் செய்வேன் என்று தெளிவாக கூறினார் . வரலஷ்மி தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அடுத்ததாக வரலஷ்மி கன்னிராசி, வெல்வெட் நகரம், காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி போன்ற தமிழ் படங்களிலும் மற்றும் தெலுங்கு கன்னட படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X