உங்களுக்கு ஹீரோயின் ரோல் செட் ஆகாதுன்னு.. அவங்களே முடிவு பண்ணிடுறாங்க.. வரலக்ஷ்மி பேட்டி!
சென்னை: ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து நடிகை வரலக்ஷ்மியின் டேனி படமும் ஓடிடியில் வெளியாகிறது.
இந்நிலையில், அந்த படம் தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் வீ கனெக்டில் கனெக்டான வரலக்ஷ்மி சர்த்குமார், பல சுவாரஸ்ய விஷயங்களை பேசியுள்ளார்.
பி.ஜி. முத்தையா தயாரிப்பில், இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்.

டேனி எனும் காவல் நாய் தான் படத்தின் மெயின் ஹீரோவே என்கிறார் வரலக்ஷ்மி சரத்குமார்.
வெல்வெட் நகரம் படத்தைத் தொடர்ந்து மற்றொரு உமன் சென்ட்ரிக் படத்தில் நாயகியாக நடித்துள்ள வரலக்ஷ்மி சரத்குமார், ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்கள் எல்லாம் உங்களுக்கு செட் ஆகாது என இயக்குநர்களே சொல்லி விடுகின்றனர்.
தனக்காக நல்ல நல்ல உமன் சென்ட்ரிக் கதாபாத்திரங்களை எழுதும் அனைத்து கதாசிரியர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
கவர்ச்சியாக ஆடை அணிவது குறித்த கமெண்ட்டுக்கு, உங்கள் பதில் என்ன என்ற கேள்விக்கு? அது என் உடம்பு, நான் என்ன அணிய வேண்டும், அணியக் கூடாது என்பதை நான் தான் முடிவு பண்ண வேண்டும் என நறுக்கென பதில் கூறியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ஜி5 OTT தளத்தில் ரிலீசாகவுள்ள டேனி படம் நிச்சயம் போர் அடிக்காமல், விறுவிறுப்பாக இருக்கும் என்று வரலக்ஷ்மி பேசியுள்ள வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











