அம்மா தனியா கஷ்டப்பட்டாங்க.. தைரியம் இருந்த முன்னாடி வந்து பேசுடா? டென்ஷனான வரலட்சுமி சரத்குமார்!

சென்னை: நடிகர் சரத்குமார் தனது முதல் மனைவியை சாயாதேவியை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மனைவியை விவாகரத்து செய்தாலும், வரலட்சுமியின் திருமணத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக சேர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில், நடிகை வரலட்சுமி தனது அம்மா மறுமணம் செய்து கொள்ளாதது பற்றி மனம் திறந்து பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

வரலட்சுமி பேட்டி: நடிகர் வரலட்சுமி சரத்குமார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது குழந்தைப் பருவ வாழ்க்கை, குடும்ப உறவுகள், திருமணம் மற்றும் சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். எனக்கு எட்டு வயதாக இருந்த போது, என் தங்கை பூஜா பிறக்க இருந்த சமயத்தில்தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விவாகரத்து நடந்தது. அந்த வயதிலிருந்தே நான் குடும்ப பிரச்சனைகளை சந்தித்து இருக்கேன். தங்கை பூஜாவுக்கும் அப்பாவை பெரிதாக மிஸ் செய்த உணர்வு இருந்ததில்லை. அப்போதிலிருந்தே நானும், என் அம்மாவும், என் தங்கையும் இவ்வளவுதான் எங்களுடைய உலகம். இதனால் உறவுகள் மீது அதிகமான அட்டாச்மெண்ட் எனக்கு இல்லை. பிறந்துவிட்டால் ஒருநாள் இறந்து தான் போவார்கள், யாரும் இங்கு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை என்ற எண்ணம் சிறு வயதிலிருந்தே எனக்கு இருந்தது. அதனால் நான் யாரிடமும் அதிகமாக பாசம் வைத்தது இல்லை என்றார்.

Varalaxmi Sarathkumar interview
Photo Credit:

மறுமணதில் விருப்பம் இல்லை: தொடர்ந்து பேசிய வரலட்சுமி, "நானும் என் தங்கையும் பலமுறை அம்மாவிடம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கும் ஒரு வாழ்க்கை துணை தேவை என சொல்லியிருக்கிறோம். ஆனால், அம்மாவிற்கு அதில் விருப்பமில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டார். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை யோசித்துக்கொண்டு இருந்தால், நம்மால் வாழ்க்கையை வாழ முடியாது. யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். நம்முடைய வாழ்க்கையை நாம் தான் வாழ வேண்டும். நமக்காக வேறு யாரும் வந்து அழப்போவதில்லை. மமற்றவர்களை காயப்படுத்தாமல், கஷ்டப்படுத்தாமல் மகிழ்ச்சிக்காக நாம் என்ன செய்தாலும் அது தவறில்லை.

கவலை இல்லை: மேலும், சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துகள் குறித்து பேசிய அவர், என்னை பற்றி பலவிதமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருக்கின்றன. ஆனால் அதை நான் காதில்கூட வாங்கிக்கொள்ள மாட்டேன். நான் எப்படி வளர வேண்டும், இந்த சினிமாவில் எப்படி முன்னேற வேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்தேன். இணையத்தில் முகம் தெரியாமல் இருந்து கொண்டு கமெண்ட் செய்வவர்களை பற்றி நான் யோசிக்கவே மாட்டேன். தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசுங்கள். அந்த தைரியம் இல்லாதவர்கள் தான் மறைமுகமாக கமெண்ட்களில் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களை பற்றி எனக்கு எந்த விதமான கவலையும் இல்லை வரலட்சுமி பேசி உள்ளார்.

சரஸ்வரி படம்: வரலட்சுமி சரத்குமார் சரஸ்வதி என்கிற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் வரலட்சுமி நடித்ததோடு தயாரிப்பிலும் பங்கு கொண்டுள்ளார். அவருடன் பிரியாமணி, பிரகாஷ்ராஜ், ஜீவா என உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X