நான் விஜய் ரசிகை தான்.. இப்பவே அழுதுடுங்க.. 10 வருசம் கழித்து அழுவதால் எந்த பயனுமில்லை - வரலட்சுமி சரத்குமார்

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர். பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தால் தான் மார்க்கெட் என்று நினைக்கும் பல கதாநாயகிகளுக்கு மத்தியில், ஒரு இன்றியமையாத நடிகையாக மாறி உள்ளார். சில கதாபாத்திரங்கள் எல்லாம் இவரைத் தவிர வேறு யாராலும், செய்ய முடியாது, வரலட்சுமி சரத்குமாரின் தேதிகள் எப்போது கிடைக்குமோ, அப்போது படத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தீர்க்கமாக இயக்குநர்களே முடிவு எடுக்கும் அளவுக்கு திறமைசாலி. அண்மையில் இவரே இயக்கி நடித்த படமான எஸ். சரஸ்வதி படம் நேரடியாக தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை மிகவும் அதிரடியாக தெரிவித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் அளித்த பேட்டியில், " நான் எப்போது ரியாலிட்டி உடன் ஒத்துப் போகிற குணம் கொண்டவள். பிறக்கும் போது அனைவரும் வெகுளியான குணத்துடன் தான் பிறப்போம், அது மட்டும் இல்லாமல் அந்த வெள்ளந்தியான குணம் மாற காரணமே நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள்தான். நான் எனது எல்லா வற்றையும் பல நேரங்களில் நடனமாகத்தான் வெளிக்காட்டி உள்ளேன். சந்தோஷமோ, கவலையோ நான் மணிக்கணக்கில் நடனம் ஆடிக் கொண்டு இருப்பேன்.

Varalaxmi Sarathkumar opened up about emotions criticism mental strength and her admiration for Vijay The actress bold statements and fearless response to online trolls are trending widely online

நான் ஒன்றில் இறங்கிவிட்டால் அதில் இருந்து பின் வாங்கிவிட்டேன் என்ற வரலாறே கிடையாது. நாம் ஒரு விஷயத்தில் பாதிக்கப்படுகிறோம் என்றால், பாதிக்கப்பட்டு விட்டோம் என்று அழுது கொண்டே இருப்பது ஒன்று அல்லது அடுத்து என்ன என்று அதிலிருந்து வெளிவருவது ஒன்று, எதைச் செய்ய வேண்டும் எனறு அவரவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பலவீனம்?: அழுவதில் தவறே இல்லை, மேலும் அதை ஒரு பலவீனத்தின் குறியீடாக பார்க்க வேண்டாம். அழுவது என்பது நம்மை மனதளவில் மீண்டும் பலப்படுத்தும் ஒரு உணர்வு. அழாமல் இருப்பது வீரம் கிடையாது, நாம் என்ன செய்கிறோம், என்ன செய்திருக்கிறோம் என்பதுதான் தைரியமும் வீரமும். நானும் எனது கடந்த காலங்களில் பலவீனமாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் நான் அதை வெளிக்காட்டியது மிகக் குறைவு. மேலும் அதை நான் யார் முன்னிலையில் வெளிப்படுத்துகிறேன் என்பதும் மிகவும் முக்கியமானது. நான் எனக்கு நெருக்கமானவர்கள் முன்னிலையிலும், எனது கணவர் நிக் முன்னிலையிலுமே எனது பலவீனத்தை வெளிக்காட்டி உள்ளேன்.

Varalaxmi Sarathkumar opened up about emotions criticism mental strength and her admiration for Vijay The actress bold statements and fearless response to online trolls are trending widely online

10 வருடம் கழித்து?: அழுகை என்பது பலவீனம் கிடையாது, நான் அழுது கொண்டே ஒருவரை அடிப்பேன், அது என்னால் முடியும் அப்படி இருக்கும் போது அதை எப்படி பலவீனம் என்று கூற முடியும். பாதிக்கப்படும்போது அங்கேயே அழுது தீர்த்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் சரி, அதை விட்டுவிட்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்காக பழி வாங்குவது என்பது சரியானது இல்லை.

விஜய் சார் ரசிகை: எனது அப்பா வேறு கட்சியில் இருக்கிறார், அனால் நான் விஜய் சார் ரசிகை, அதனால் என்ன? அது அவரவர் விருப்பம், ஆனால் அந்த புரிதல் கூட இல்லாதவர்கள் இணையத்தில் கமெண்ட் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என் முன்னால் வந்து அப்படி மோசமாக கமெண்ட் அடித்து விடுவார்களா? மூஞ்சியை உடைத்துவிடுவேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டியில் வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்து கொண்ட பலவும் பாராட்டுக்குரியது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X