குழந்தை பெத்துக்குறாங்க.. உடலுறவு குறித்து பேச மறுக்கிறார்கள்.. நாட்டுல இது ஒரு தலைவலி வரலட்சுமி சரத்குமார்
ஹைதராபாத்: நடிகை வரலட்சுமி எஸ். சரஸ்வதி என்ற படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கி உள்ளார். இந்த படத்தில் இவர் நடிக்கவும் செய்துள்ளார். படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். இப்படி இருக்கையில் இந்த படத்தின் புரோமோஷனுக்காக அளித்த பேட்டியில் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, " நமது நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் உடலுறவு குறித்து பேச மறுக்கிறார்கள். அது குறித்து பேசினாலே ஐயோ கூடாது என்கிறார்கள். உலகிலேயே மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவில் உடலுறவு குறித்து பேச மறுப்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.
ஆனால் உடலுறவு வைத்துக் கொண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டே இருக்குறீர்கள். ஏதோ தொழிற்சாலை போல குழந்தைகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதன் பின்னர் குழந்தைகளைப் பெற்று விட்டோம், அதனால் கஷ்டப்படுகிறோம் என்று கூறுகிறார்கள். எதற்காக குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள் என்று நான் கேட்கிறேன். முதலில் திட்டமிடுங்கள். உங்களிடத்தில் குழந்தையை பராமரிக்க போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை முடிவு செய்துவிட்டு அதன் பின்னர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

சவால்: குழந்தையை பெற்றுவிட்டு அதன் பின்னர் அவர்களை வளர்க்க திட்டமிடாதீர்கள். இன்றைக்கு பொருளாதாரம் மாறிக் கொண்டே உள்ளது. குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பது என்பது பொருளாதார ரீதியாகவே மிகவும் சவாலானது. உங்களால் குழந்தைகளை பராமரிக்க கூடிய அளவுக்கு நிதி ஆதாரம் இல்லாமல் குழந்தைகளை பெற்றுவிட்டு, பணத்திற்காக மற்றவர்களிடம் போய் நிற்காதீர்கள். சிலர் என்னிடத்தில் வந்து குழந்தைகள் உள்ளது எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். என்னைக் கேட்டா, அவர்கள் குழந்தை பெற்றார்கள். அவர்கள் செய்த தவறுக்கு நான் ஏன் உதவ வேண்டும்?
அறிவுரை: என்னிடம் வேலை பார்ப்பவர்களிடமே நான் சொல்வது திருமணம் செய்து கொள்ளுங்கள், பொருளாதார ரீதியாக நீங்கள் மிகவும் உறுதியான பின்னர் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி வருகிறேன். நீங்கள் குழந்தையை பெற்றுவிட்டு அதற்கு உதவி செய்யச் சொல்லி என்னிடம் வந்து நிற்காதீர்கள். நீங்கள் தான் உங்கள் குழந்தையைப் பார்க்க வேண்டும். மேலும் சிலர் தாத்தா சாகறேன்னு சொன்னார், பாட்டி சாகறேன்னு சொன்னார்கள் அதனால் தான் குழந்தை பெற்றுக் கொண்டேன் என்று எல்லாம் கூறுகிறார்கள். அதற்காக நாம் நமது வாழ்க்கையை சீரழிக்க முடியாது தானே. எமோஷனல் பிளாக்மெயில் இங்கு உள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதற்காக எல்லாவற்றிகும் நாம் தலையாட்டிக் கொண்டே இருக்க கூடாது" என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











