வரனே ஆவஷ்யமுட் தமிழ் ரீமேக்கில் ரஜினி.. ? ஆசையை போட்டுடைத்த ஷோபனா!
சென்னை : அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷோபனா, வரனே ஆவஷ்யமுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான வரனே ஆவஷ்யமுட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றி திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப்படுமா என்பது பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவராத நிலையில் ஷோபனாவின் இந்த பேட்டி ரசிகர்களின் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

பேராதரவுடன் வெற்றி
வெறும் நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றி சுவாரஸ்யமான காதல் வலைகளை பின்னி அனைத்து வயது தரப்பினரும் ரசிக்கும்படி உருவாகியிருந்த "வரனே ஆவஷ்யமுட்" திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றது.

தமிழிலேயே வசனங்கள்
நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை அனுப் சத்யம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். முற்றிலும் சென்னையை சுற்றியே நடப்பது போல எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றதற்கு இதில் வரும் சென்னையின் பெரும்பான்மையான இடங்களும் மற்றும் பாதிக்குப் பாதி தமிழிலேயே இருக்கும் வசனங்களும் தமிழ் ரசிகர்களை ஈர்க்க கூடுதல் பலமாக இருந்தது.

காதல் ஜோடிகள்
சுரேஷ்கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த "வரனே ஆவஷ்யமுட்" திரைப்படம் இரண்டு வேறு வேறு வயதை சார்ந்த காதல் ஜோடிகளையும் மையப்படுத்தி உருவாகியிருந்தது. காதல் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் இந்த திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரனே ஆவஷ்யமுட்
நடிகை ஷோபனா சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில், தொகுப்பாளர் "வரனே ஆவஷ்யமுட்" தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் நடிகர் சுரேஷ்கோபி கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்த் இதில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஷோபனாவிடம் கருத்தை கேட்க, அதற்கு சற்றும் யோசிக்காமல் உடனடியாகவே ரஜினிகாந்த் என்று பதில் அளித்தார்.

இருவரும் மீண்டும் இணைந்து
ரஜினிகாந்த் என அந்தக் கேள்விக்கு பதில் கொடுத்த வீடியோயை இதற்கு முன் பலரும் பார்த்து ரசித்த நிலையில் தற்போது ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவிட்டு உள்ளார். மேலும் ஷோபனா ரஜினியுடன் இணைந்து ஏற்கனவே தளபதி திரைப்படத்தில் நடித்து அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து வரனே ஆவஷ்யமுட் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் ஷோபனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்குமென ரசிகர்கள் ஒரு நற்செய்தியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











